நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.

454

நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் கையளிப்பு.

வவுனியா
வவுனியாவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட கை கழுவும் இயந்திரங்கள்  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பனிமனைக்கு இன்று (09) கையளிக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் சுகாதாரத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார நடைமுறைகளை இலகுவாக்கும் முகமாக, ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் நிதி பங்களிப்புடன், சவர்க்காரம் மற்றும் நீர் என்பன கைகளில் பயன்படுத்தாமலே பெறப்பட்டு கைகளை சுத்தம் செய்யும் முறையில் வடிவமைக்கப்பட்ட கை சுத்தம் செய்யும் இயந்திரங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம். மகேந்திரனிடம் கையளிக்கப்பட்டது.

ஐக்கிய அபிவிருத்தி நிதியத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் ஏபிரகாம் ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா ஊடக அமையம், வவுனியா சமுதாய பொலிஸ், வவுனியா வர்த்தக சங்கம் மற்றும் சர்வமத குழு ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.