சர்வதேச நீதிக்காக போராடும் சாட்சியங்கள் இன்று Bry-sur-Marne நகரசபை முன்றலில்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்ட போதிலும் ஈழத்தமிழ் மக்கள் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலையே காணப்படுகின்றது.நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்கான பொறிமுறைகளை கொண்டதல்ல எனவே தொடர்ந்தும் தமிழிப்படுகொலையாளிகள் பூகோள அரங்கில் வல்லரசுகளுக்கு இடையில் காணப்படுகின்ற பனிப்போரை பனிப்போரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளும் சூழ்நிலையே எதிர்காலத்திலும் காணப்படுகின்றது எனவே உலக மக்களின் மனச்சாட்சியை திறக்கும் வகையில் ஈழத்தமிழர்களின் அறவழிப்போராட்டங்களை தொடர வேண்டிய சூழ்நிலையே காணப்படுகின்றது.பல்வேறு வழிகளிலும் ராசதந்திர அடிப்படையில் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.

அந்தவகையில் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன ஈழத்தமிழினப்படுகொலை ஆதாரங்களை உலக மக்கள் முன் கொண்டு வந்து இலங்கை இனப்படுகொலையாளிகளை உலக மக்களுக்கு அம்பலப்படுத்த போராடிவருகின்றன.இன்று பிரான்சு1 Grande Rue Charles de Gaulle, 94360 Bry-sur-Marne நகரசபை முன்றலில் இனப்படுகொலை நிழற்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பரப்புரைகள் இடம்பெற்றன.