கிளிநொச்சியில் புலிகளின் முகாம் அமைந்த பகுதியில் ஐவர் கைது..!

283

கிளிநொச்சி வட்டக்கச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட அன்பு முகாம் என்றழைக்கப்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காட்டுப் பகுதியில் புதையல் தோண்ட நடவடிக்கை இடம்பெறுவதாக இராணுவப் புலனாய்வாளர் மற்றும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்படும் ஸ்கானிங் கருவி மற்றும் அவர்கள் பயணித்த மோட்டார் கார் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்