கிளிநொச்சி ஏ-9 வீதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் காயம்

124

கிளிநொச்சி ஏ-9 வீதி கந்தசுவாமி கோயில் முன்பாக இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மூவரில் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஏ-9 வீதி வழியாக பரந்தன் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியால் நடந்து சென்றவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் உயிரிழந்தவர் கிளிநொச்சி விவேகாநந்தாநகர் பகுதியை சேர்ந்த செல்லப்பா சந்திரகுமார் என்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அவரது சடலம் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை காயமடைந்த மற்றைய நபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலாதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.