ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் – இத்தாலி அறிவிப்பு

78

கொரோனா தொற்றின் மூன்றாவது அலைக்கு மத்தியில் இத்தாலிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு ஐந்து நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஐரோப்பிய ஒன்றியதிற்கு வெளியில் இருந்து வரும் பயணிகளுக்கே குறித்த கட்டுப்பாடுகளை இத்தாலிய அரசாங்கம் விதித்திருந்தது.

ஜேர்மனியில் அனைத்து விமான பயணிகளும் எதிர்மறையான கொரோனா வைரஸ் பரிசோதனையை வழங்க வேண்டிய புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

மூன்றாவது அலை தொடர்ந்தால் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சமாக உயரக்கூடும் என பொது சுகாதார நிறுவனத்தின் தலைவர் எச்சரித்திருந்த நிலையில் பயணிகள் மீதான கட்டுப்பாடுகளை ஜேர்மனி அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய பயணிகளுக்கு இத்தாலி புதிய கட்டுப்பாட்டினை அறிவித்துள்ளது.

இதேநேரம் மார்ச் 19 ஆம் திகதியுடன் முடிவடைந்த வாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொரோனா தொற்றினால் பதிவு செய்யப்பட்ட மொத்தம் இறப்பு எண்னிக்கை 963 ஆக காணப்படுகின்றது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் பதிவாகிய மிகக் குறைந்த எண்ணிக்கை இது என தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.