அனைத்துலக மனித உரிமை சங்கத்தின் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான போராட்ட மற்றும் கணக்கு அறிக்கை!

அனைத்துலக மனித உரிமை சங்கத்தின் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான போராட்ட மற்றும் கணக்கு அறிக்கை!

தமிழர் தாயகமான இலங்கை வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும் சுதந்திரமானதுமான உரிமையுடன் கூடிய வாழ்வுக்காகவும் கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழினத்திற்கு சிங்கள பேரினவாத அரசு இழைத்த மனித குலத்திற்கு எதிரான தமிழினப்படுகொலை மீறல்களுக்கு சர்வதேச நீதி கோரிய போராட்டங்களில் 2013 ஆம் ஆண்டிலிருந்து இற்றைவரை பிரான்சு அனைத்துலக மனித உரிமைச் சங்கத்தினராகிய நாம் எம்மால் முடிந்த பங்களிப்பை செய்து வருகிறோம்.

குறிப்பாக தமிழினத்திற்கு சர்வதேச நீதி கோரி தாயகத்தின் இனப்படுகொலைக்கு ஆதாரமான ஆவணங்கள் நிழற்படங்களை திரட்டி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர்களின் போது அதன் முன்றலில் பார்வைக்கு வைத்து விழிப்புணர்வு பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளோம் . இச் செயற்பாடு சர்வதேச சமூகத்திற்கு எமது போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர உந்துதலாகவும் இருந்திருக்கும் என நம்புகின்றோம் . அதே வேளை நடைப்பயணப் போராட்டங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றோம் . இப்பயணத்தில் இந்த ஆண்டு ஆரம்ப நாளிலிருந்து தமிழ் பண்பாட்டு வலையமும் கைகோர்த்து போராடி வருகின்றனர்.

எமது இந்த உரிமை மீட்பு போராட்டங்களுக்கும் பணிகளுக்கும் தார்மீக ஆதரவுகளை, உதவிகளையும் தமிழுணர்வாளர்கள் பலரும் வழங்கி எமக்கு பக்கபலமாக இருப்பதை இங்கு நன்றியுணர்வுடன் தெரிவிப்பதுடன் வழங்கப்பட்ட உதவி தொடர்பான விபரங்களை இங்கே இணைக்கின்றோம்.
நன்றி