தமிழினப்படுகொலைக்கு நீதி கோரி பிரான்சு Ablon-sur-Seine நகரசபை முன்பாக ஆதாரங்களை வைத்து கவனயீர்ப்பு

இலங்கையில் ஈழத்தமிழர்கள் கடந்த 73 ஆண்டுகளாக இன்றும் சிங்கள ஆளும் பேரின வ்ர்க்கத்தால் உரிமைகள் மறுக்கப்பட்டு இனப்படுகொலைக் உள்ளாக்கப்பட்டு வரும் நிலையில் சர்வதேச நீதி மன்றத்தின் முன் இலங்கை சிங்கள இனப்படுகொலை குற்றவாளிகளை நிறுத்துவதன் மூலம் பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு உரிமையும் நீதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சர்வதேசத்தின் முன் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கடந்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிலத்திலும் புலத்திலும் தமிழுணர்வாளர்கள் அறவழிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.இந்த போராட்டங்களின் வலிமையின் காரணமாகவே இன்றும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.எனினும் இன்னும் பலபடிகள் மேல் சென்று தமிழின நீதியை மிக விரைவாக பெறவேண்டுமாயின் உலக நாடுகளின் ராஜதந்திரிகளின் ஆதரவைப்பெற்று நகரவேண்டிய தேவை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு.அதற்காக அறவழிகளில் நீதிகோரி தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற தமிழினப்படுகொலையை ஆதாரங்களுடன் முன்வைத்து போராடி வேண்டிய சூழல் உள்ளது.

அந்த வகையில் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன தமிழினப்படுகொலை ஆதாரங்களை ஆண்டுகள் தேதிகள் அடிப்படையில் சேகரித்து ஒருங்கிணைத்து ஆவண ரீதியாக முன்வைப்பு போராட்டத்தை நடத்திவருகின்றன.ஆதாரஙகளுடனான போராட்டம் வலிமை மிக்கது என்ற அடிப்படையில் இனப்படுகொலை நிழற்படங்கள் பிற நாட்டு மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் கவனத்தை பெறுகின்றன இதன் மூலம் ஈழத்தமிழர் நிலையை உலமெங்கும் ஏராளம் மக்களுக்கு அறியப்படுத்தும் நிலை உருவாகிவருகின்றது.அந்த வகையில் இன்று பிரான்சு 6 Rue du Maréchal Foch, 94480 Ablon-sur-Seine நகரசபை முன்பாக இந்த கவனயீர்ப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.