காய்ச்சல் அறிகுறி, கரோனா நோயாளிகள் வாக்களிக்க வந்தபோது பாதுகாப்பு உடை அணிந்து பணிபுரிந்த வாக்குச்சாவடி அலுவலர்கள்

72

காய்ச்சல் நோயாளிகள், தொற்று அறிகுறியுள்ளவர்கள் வாக்களிக்க வந்தபோது வாக்குச்சாவடிகளில் பணிபுரிந்த பணியாளர்கள் கவச உடை அணிந்து பாதுகாப்பாக பணிபுரிந்தனர்.

வாக்குச்சாவடிகளில் கரோனா தொற்று பரவாமல் இருக்க வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்வதற்கும், கிருமிநாசினி வழங்குவதற்கும் 2 கரோனா பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் பரிசோதனை செய்து காய்ச்சல் இல்லாவிட்டால் மட்டுமே வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். மதுரை மாவட்டத்தில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நோய்த்தொற்று அறிகுறிகளுடன், காய்ச்சலுடன் பெரியளவுக்கு வாக்காளர்களுக்கு கண்டுபிடிக்கவில்லை.

ஒரு சிலருக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மேலும், கரோனா தொற்றுள்ள வாக்காளர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வர ஆர்வம் காட்டவில்லை.

ஆனாலும், வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு கரோனா வாக்காளர்கள், காய்ச்சல் உள்ளவர்கள் வாக்களிக்க வந்தால் அவர்கள் வாக்களிக்கும்போது பாதுகாப்பாக இருக்க வாக்குச்சாவடி அலுவலர்கள், பிபிஇ கவச ஆடைகள் அணிந்து இருந்தனர். அப்போது காய்ச்சல் நோயாளிகள், வாக்களிக்க வந்தனர்.

அவர்கள் வாக்களித்துச் செல்லும் வரை வாக்குச்சாவடி அலுவலர்கள், பாதுகாப்பு கவச ஆடைகள் அணிந்து பாதுகாப்பாக பணிபுரிந்தனர்