கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக பாரிய விபத்து!

87

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் ரிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது.

இன்று (புதன்கிழமை)பகல் 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை.

கிளிநொச்சியிலிருந்து முறிகண்டி நோக்கி ஒரே திசையில் பயணித்த இரு வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன.

வீதியில் பயணித்த கார் வீதியை குறுக்கிட்டு கடக்க முற்பட்டுள்ளது. காரின் பின்னால் பயணித்த மற்றுமொரு ரிப்பர் வாகனத்தை முந்தி சென்ற ரிப்பர் வாகனம் கார் வீதியை கடக்க முற்படுவதை அவதானிக்காமல் முந்தி செல்ல முற்றப்பட்போது காருடன் மொதியுள்ளது.

கார் பாரிய அளவில் சேதமடைந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான கார் வீதி ஓரத்தில் இருந்த வாகன ரயருடன் மோதி நின்றுள்ளது. குறித்த ரயர் இல்லாத சந்தர்ப்பத்தில் மரத்துடன் மோதி பாரிய விபத்தில் சிக்கியிருக்ககூடும் என சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆயினும் குறிதத் விபத்தில் வாகனங்கள் பாரிய சேதமடைந்துள்ளதுடன், எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் தெய்வாதீனமாக ஏற்பட்டிருக்கவில்லை. விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்த வருகின்றனர்.