கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் கண்காட்சி

64

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ், கிராமிய மட்ட உற்பத்தியாளர்களின் கண்காட்சி, மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று (07) நடைபெற்றது.

கிராம மட்ட சிறு உற்பத்தியாளர்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்துவருவதுடன், அவர்களுக்கான சந்தை வசதிகளையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிறு உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் ஆரம்பமான இந்தக் கண்காட்சியில், மட்டக்களப்பு மாவட்டச் செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி ல.பிரசாந்தன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவு மேற்பார்வை உத்தியோகத்தர் சி.வினோத் உட்பட பலர் கலந்துகொண்டனர்