திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12-ம் தேதி முதல் இலவச தரிசனம் ரத்து

73

ஆந்திர மாநிலத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 12-ம் தேதி முதல் இலவச தரிசனத்தை ரத்து செய்வதாக தேவஸ்தானம் நேற்று மாலை அறிவித்தது.

ஆந்திராவில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 2,000-க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனைக் கருத்தில்கொண்டு, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 11-ம் தேதி 6 மணிவரை மட்டுமே இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என்றும், 12-ம் தேதி முதல் இலவச தரிசனம் (தர்ம தரிசனம்) முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆனால், ரூ. 300 ஆன்லைன் டோக்கன் தரிசனம், விஐபி பிரேக், வாணி அறக்கட்டளை தரிசனம் போன்றவை நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.