விடுதலைப் புலிகளின் தலைவர் ஒளிப்படத்தை வைத்திருந்த சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

96

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை வைத்திருந்த சந்தேககத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை, விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) யாழ்.நீதவான் நீதிமன்றத்தில், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞனை பொலிஸார் முன்னிலைப்படுத்தினர்.

மேலும் குறித்த இளைஞன் மீது, இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ், வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தல் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரினால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது இளைஞன் சார்பாக,மூத்த சட்டத்தரணி மு.றெமிடியஸ் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது இரு தரப்பினரின் மனுவினையும் விசாரணைக்கு உட்படுத்திய நீதிபதி, எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நேற்று முன்தினம் குறித்த இளைஞனின் அலைபேசியில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனுடைய ஒளிப்படம் உள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையிலேயே அவர் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.