நீதி கோரும் பயணத்தை தொடர நிதி தந்தும் கைகொடுப்பீர்

முள்ளிவாய்க்காலில் தமிழரது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு சர்வதேச ரீதியில் தமிழ் மக்களுக்கான தாயகத்தின் உரிமையையும் சுதந்திரத்தையும் நீதியையும் வென்றெடுக்க முள்ளிவாய்க்காலில் எமது மக்கள் தங்கள் இரத்தம் உயிர் தசை எல்லாவற்றையும் ஆகுதியாக்கி தர்மத்துக்கான சாட்சியமாய் தந்துபோயுள்ளார்கள்.கடந்த பதினொரு ஆண்டுகளாக தமிழர்களாகிய நாம் வன்னிப்பெருநிலத்தில் இறுதிப்போரில் தமிழ் மக்கள் எல்லோரும் கொடுத்த அப்பணிர்ப்புக்கான பலனை அடைந்தோமா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.ஐநா மனித உரிமைப்பேரவையிலும் இம்முறை தமிழருக்கு நீதிக்கான பயணம் ஒரு தேக்கநிலையில் அதாவது ஒரு பின்னடைவையே கண்டிருக்கின்றது.சர்வதேச நீதி மன்றப்பொறிமுறையை உருவாக்குவதில் தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையே காணப்படுகின்றது.ஆயினும் சோர்ந்துபோகாமல் தமிழின அழிப்புக்கான நீதியை பெற்றுக்கொள்ள சளைக்காதும் களைக்காதும் போராடவேண்டியுள்ளது.

பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கத்தினராகிய நாம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தமிழினப்படுகொலை ஆதாரங்களை ஐநா சபைக்கு முன்பும் ஏனைய நாடுகளின் தூதரகங்கள் பாராளுமன்றம் முன் பார்வைக்கு வைத்து போராடிவருகின்றோம்.இன்று தமிழ் பண்பாட்டு வலையமும் இணைந்து பிரான்சு நாட்டின் அனைத்து நகரசபைகளின் முன்பும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தி செல்ல எண்ணி தினமும் ஒவ்வொரு நகரசபை வாசலின் முன்பு நிற்கின்றோம்.இதன் மூலம் ஈழத்தில் தமிழர்களுக்கு சிங்களப் பேரினவாதம் இழைத்த அநீதிகளை இந்த உலகுக்கும் நாடுகளுக்கும் புரியவைத்து அப்பலப்படுத்தி நாடுகளின் ஆதரவை தமிழர்களுக்காக திரட்ட அவர்களின் மனச்சாட்சியின் முன்பும் இந்த போராட்டத்தை முன்னெடுக்கின்றோம்.இந்த போராட்டத்தை முன்னெடுக்க தமிழ் மக்களுக்கு நிதி ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது.உங்களால் சிறு துளியாக எம்மால் தமிழ் வர்த்தக நிலையங்களில் வைக்கப்படும் உண்டியலில் போடப்படும் சிறு சிறு நிதி பெருநிதியாக மாறி எமது போராட்டத்தை ஐரோப்பா எங்கும் விரிவாக்க உதவும்.அதை விரைவாகவும் செய்ய வேண்டியுள்ளது.தாமதப்படுகின்ற தமிழின நீதியை விரைவு படுத்த நாம் அனைவரும் இணைந்து இந்தப்போராடடத்தை வலுப்படுத்த வேண்டும்.அதற்காக இந்த உண்டியலுடன் கையேந்துகின்றோம்.நாடுகளின் சட்டத்திட்டத்திற்கு வங்கிக்கணக்கு பேணப்பட்டு வரவு செலவு கணக்கு செய்யப்பட்டு வெளிப்படுத்தப்பட்டு இந்த மனித உரிமைக்கான பயணம் நடக்கின்றது.

அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் ம.கஜன்== 0033758087084

????????????????????????????????????

எனவே அமைப்பு கட்சிகள் என்ற பேதங்களை கடந்து நாங்கள் தமிழர்கள் எமது தாயகம் தமிழீழம் அதற்கான நீதியை சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற பொது கொள்கையுடன் ஈழத்துக்காக உங்கள் இதயங்களை திறவுங்கள் என்ற கோரிக்கையுடன் சர்வதேசத்தை நோக்கி நீளும் இந்த கரங்களை தமிழ் மக்கள் உங்கள் சிறு நிதி பங்களிப்பின் ஊடாக பலப்படுத்த வேண்டுமென உங்களை அன்புரிமையுடன் வேண்டிநிற்கின்றோம்.