விடுதலை விரைவுபடுத்த அதிஷ்ட லாபம் சீட்டு மூலம் ஆதரவளிப்பீர்.

1366

விடுதலை விரைவுபடுத்த அதிஷ்ட சீட்டு மூலம் ஆதரவளிப்பீர்

தமிழீழ தேசத்தில் தமிழ் மக்கள் உரிமையுடனும் சுதந்திரத்துடன் வாழ்வதற்கு 2009ஆம் ஆண்டு வரை நடந்த பெரும் உன்னத போராட்டம் பெரும் அர்ப்பணிப்பை முள்ளிவாய்க்காலில் கொடுத்து இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோருவதன்மூலமாக தமிழருக்கு விடுதலையின் தேவையை சர்வதேசம் உணர்ந்து ஆதரவளிக்கும் சூழலை ஏற்படுத்துவதற்கான கடமையை தமிழ் மக்களிடம் குறிப்பாக புலம்பெயர் மற்றும் தமிழக உறவுகளிடம் விட்டுச்சென்றுள்ளது.

தாயத்தில் கடந்து பன்னிரண்டு ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிங்கள பேரிவாத அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை மேற்கொண்டு வரும் நிலையில் புலம்பெயர் நிலமே பிரதான அறவழிப்போராட்ட களமாக உள்ளது.

எனவேதான் புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் அறவழிப்போராட்டத்திற்கு முழுமையாக பயன்படுத்துவதன் மூலம் தமிழினப்படுகொலை என்ற விடயத்தை சர்வதேச நாடுகளில் நோக்கப்படுகின்ற ஒன்றாக கவனயீர்ப்பு செய்து ஐநா சபை மூலம் சிறீலங்கா பேரினவாத அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை வீண்போகாத நிலையில் படிப்படியாக உலக நாடுகள் தமிழர்களின் நீதிக்கோரிக்கைகளை அங்கீகரித்துவரும் நிலை தோன்றியுள்ளது.

பல்வேறு நாடுகளின் நகர சபைகள் மாகாண அரசுகள் பாராளுமன்றங்கள் ஈறாக அமெரிக்க பிரதிநிதிகள் சபை வரை ஈழத்தமிழ் மக்களுக்கு நடத்தப்பட்டுவரும் பேரவலங்கள் நீதி கோரும் தீர்மானங்களாக மாறியுள்ளன. இதற்கு காரணம் கடந்து 12 ஆண்டுகளில் நடத்தப்பட்டுவரும் அறவழிப்போராட்டங்களே.

கடந்த பல ஆண்டுகளாக பிரான்சு அனைத்துலக மனித உரிமைச் சங்கம் ஆகிய நாம் ஐநா சபை முன்பும் பாராளுமன்றங்கள் நகர சபைகளின் முன்பும் தமிழினப்படுகொலை ஆதாரங்களை பார்வைக்கு வைத்து உலக மக்களின் மனச்சாட்சியின் முன் ஈழத்தமிழர்களுக்காக உங்கள் இதயத்தை திறவுங்கள் என்ற தொனிப்பொருளில் போரோடுகின்றோம்.கொரோனா உயிர்கொல்லிக்கு மத்தியிலும் எம் உயிர்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராடுகின்றோம். இனியும் போராடுவோம்.ஆனாலும் எமது போராட்ட வேகத்தையும் விரிபடுத்தலையும் செய்ய முடியாதபடி நிதி நெருக்கடி எம் முன்னே பெரும் பூதமாக நிற்கின்றது.நாள் முழுதும் தெருவில் இனப்படுகொலை சாட்சியங்களோடு நிற்கின்றோம்.நாளுக்கு ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு நூற்றுக்கணக்கான கிலோ மீற்றர் வரை நகரவேண்டும் நிழற்படங்களை பக்குவமாக ஏற்றிக்கொண்டு அதைவிடவும் நகரசபை முக்கியத்தர்களை சந்திக்கும் முயற்சிகள் மற்றும் எமது போராட்ட நியாயத்தை அந்த மக்களின் மொழிகளில் விளங்கப்படுத்தவேண்டும் பணி செய்கிறவர்களுக்கு உணவு எரிபொருள் என ஒரு போராட்டத்தின் பின்னணியில் ஏராளம் தேவைகள் உண்டு என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அன்பு மக்களே நாம் உங்கள் சார்பாகவே போராடுகின்றோம்.அதனால் எங்களை தொடர்ந்து தக்க வைக்க உங்கள் உரிமையுடன் கூடிய பங்களிப்பு தேவைப்படுகின்றது.அதற்கு ஒருவழியாக காலத்தேவையாக அதிஸ் இலாபச்சீட்டு மூலம் குறித்து தொகை நிதியை இப்போராட்டத்திற்கு பங்களிக்க வேண்டி நிற்கின்றோம்.ஒரு அதிஸ்ட இலாப சீட்டு(5euros) மட்டுமே பத்து சீட்டுக்களையும் கூட வாங்கலாம்.விபரங்களை சீட்டுகளில் பார்த்து தெரிந்து கொண்டு தமிழீழம் பொறிக்கப்பட்ட தங்க பதக்கத்தை பரிசாக பெறுவதுடன் எங்கள் தேசத்தின் விடுதலையை விரைவு படுத்த சீட்டெடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டுகோள்கின்றோம்.

அனைத்துலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் 0033 7 58 08 70 84