கரும்புலிகளின் கனவைச் சுமந்தபடி தமிழினப்படுகொலைக்கு Les Lilas நீதி கோரி பிரான்சு நகரசபை முன் கவனயீர்ப்பு

248

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் தடைநீக்கிகளாக இருந்து விடுதலைக்காக தங்களை தற்கொடையாக்கிய உன்னத சரித்திரங்களாம் கரும்புலிகளை நினைவு கூரும் நாளான இன்று அவர்களின் கனவுகள் மெய்ப்படவேண்டியதன் அர்த்தத்துடன் அவர்கள் விட்டுச்சென்ற காலப்பணியை சர்வதேச மயப்படுத்தி தமிழின நீதி கோரும் செயற்பாடு இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிங்களப் பேரினவாத அரசாங்கங்களால் கடந்த 73 ஆண்டுகளாக தமிழர் தாயகத்தில் இன ஒடுக்குமுறையும் இனப்படுகொலையும் அடையாள அழிப்பும் நடத்தப்பட்டு வருகின்றன.சர்வதேசத்தின் மனித உரிமைச்சாசனங்களை மீறி சிங்கள பௌத்த மேலாதிக்க தனத்துடன் முள்ளிவாய்க்கால் வரை மனித குலத்துக்கு எதிரான பேரவலத்தை சிங்கள் அரசாங்கம் நடத்தியுள்ளன.ஐக்கிய நாடுகள் சபையில் சிறீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானங்கள் பல தடவைகள் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் அதை தூக்கி எறிந்து பொறுப்புக்கூறுவதில் இருந்து விலகி இராணுவ சர்வாதிகார அரசாங்கமாக சிங்களப் பேரினவாதம் செயற்பட்டு வருகின்றது.இந்த நிலையில் இன்றும் தமிழர் தாயகத்திலும் புலத்திலும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் நீதிக்காக பேராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.தமிழர் தாயகத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையின் ஆதாரங்களை சர்வதேசத்தின் கண்ணுக்கு தெரியப்படுத்தி தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஆதரவுத்தளத்தை நோக்கி கவனயீர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச்சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன தமிழ் மக்களுக்கான நீதியை விரைவு படுத்த இனப்படுகொலை ஆதாரங்களை உலகுக்கு அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் ஓயாது தினமும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பயணத்தில் தமிழீழ செயற்பாட்டாளர் விக்டரும் இணைந்துகொண்டு பரப்புரையில் ஈடுபட்டும் வருகின்றார்.அந்த வகையில் இன்று பிரான்சு 96 Rue de Paris, 93260 Les Lilas நகர சபை முன்பு இனப்படுகொலை ஆதாரங்களை பார்வைக்கு வைத்து பரப்புரையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.