சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டவர்கள். மட்டுமே சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட ஆட்சியாளர்.

132

சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டவர்கள். மட்டுமே சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட ஆட்சியாளர்.

திருச்சி அகதிகள் முகாமில் 15 பேர் தற்கொலை முயற்சி. ஊடகங்களில் செய்தி வரவே.திருச்சி சிறப்பு முகாம் நோக்கிப் பயணமானேன்.மாலை 5 மணி திருச்சி மத்திய சிறை நுழைவு வாயிலேயே மழைத்துளி நம்மை வரவேற்றது.

துப்பாக்கி ஏந்திய காவலரிடம் விசாரித்தேன் தற்போது தான் பணிக்கு வந்திருப்பதாகவும்.இதற்கு முன்பு காவல் பணி மேற்கொண்ட சக காவலர் சிறப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை 4 ஆம்புலன்ஸ் வாகனத்தில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல் சொன்னார்.

அங்கிருந்து விடைபெற்று சிறப்பு முகாம் வந்தடைந்தேன்.நுழைவாயிலின் பிரமாண்டக் கதவு அருகே நின்ற பொழுது அக்கதவில் சிறிய கதவு திறந்தது காவலரிடம் நான் சென்னையிலிருந்து வந்திருக்கிறேன் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டேன்.சில நொடிகளில் காவல் உயர் அதிகாரிகள் வந்தனர்.

அருகே உள்ள துணை ஆட்சியாளர் அவர்களை சந்தித்து அனுமதி பெற்று வாருங்கள் என்றனர்.தமிழ்நாடு அரசு மறு வாழ்வுத்துறை மற்றும் அகதிகள் முகாம் அலுவலகம் சென்றேன்.தனித்துணை ஆட்சியர் ஜமுனா ராணி அவர்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்றிருப்பதாக சொல்லப்படவே மாவட்ட ஆட்சியாளரின் அலுலகத்தை நோக்கி என் பயணத்தைத் தொடர்ந்தேன்.

மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்று நேர்முக உதவியாளரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.பார்வையாளர்கள் அறையில் அமர்ந்தேன்.சில நிமிடங்களில் அழைப்பு விடுத்தனர் மாவட்ட ஆட்சியாளர் கு.சிவராசு அவர்களைச் சந்தித்தேன்.திருச்சி சிறப்பு முகாமில் உள்ளவர்கள் தங்களை விடுதலை செய்ய கோரி 15 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்த நிலையில்.அரசு உயர் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

அவர்களின் கோரிக்கை கண்டு கொள்ளாத நிலையில் திருச்சி சிறப்பு முகாம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் தற்போது பதட்டமாக காணப்படுகிறது.அங்கு உள்ளவர்களின் நிலை தொடர்ந்து பரிதாபமாக இருக்கிறது.அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வருவது குறித்து பேசினேன்.

சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் தண்டிக்கப்பட்டவர்கள். மட்டுமே சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறப்பு முகாம் சென்றதையும் அவர்களின் கோரிக்கை குறித்து அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டு விட்டன என்று குறிப்பிட்டார்.மாவட்ட ஆட்சியாளர் அவர்களிடம் சிறப்பு முகாம் சென்று அவர்களை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தேன்.

தனக்கு அதிகாரம் இல்லை என்றும் உறவினர் என்றால் அனுமதிக்கலாம் என்றார்.தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து கொண்டு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

சிறப்பு முகாமா…சித்திரவதை முகாமா.

ஆவல் கணேசன்……