சித் ஶ்ரீராம்’ நிகழ்ச்சியைத் தவிர்க்க முடியாத, உணர்வு ரீதியான காரணங்களினால், பிற்போடப்பட்டுள்ளது

1069

ஜெர்மனி மற்றும் சுவிஸ் நாடுவாழ், பாடகர் சித் ஶ்ரீராம் ரசிகர்களுக்கு,

ஜெர்மனியில் கார்த்திகை  20ஆம் திகதியும், சுவிஸில் கார்த்திகை 21ஆம் திகதியும் (20/21.11.2921) நடைபெறவிருந்த, ‘அன்புடன் சித் ஶ்ரீராம்’ நிகழ்ச்சியைத் தவிர்க்க முடியாத, உணர்வு ரீதியான காரணங்களினால், எதிர்வரும் 22.01.2022 இல் ஜெர்மனியிலும், 23.01.2022 இல் சுவிஸிலும், மீண்டும் நடத்தலாமென தீர்மானித்திருக்கிறோம். ரசிகர்களான உங்களுக்கு இதன்மூலம் நாங்கள் கொடுக்கும் நிர்ப்பந்தங்களையும், சிரமங்களையும் எங்களால் நிச்சயம் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்கு முதலில் மன்னிப்பைக் கோருகிறோம். ஏற்கனவே, கோவிட் பெரும் தொற்றின் காரணமாக நிகழ்ச்சியைத் தள்ளிவைத்ததையும் நாம் மறக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த  இறுக்கமான சூழ்நிலையின் மத்தியில் உருவான சகஜமான தளர்வைச் சாதமெனக் கருத்திற்கொண்டு, கார்த்திகை 20/21 திகதிகளில் இந்நிகழ்ச்சியை நடத்திவிட முடிவெடுத்தோம். அதை நடைமுறைப்படுத்தவும் ஆயத்தமானோம். ஆனால்,  அந்தத் தினங்களில், எமக்காக ஈழத்தில் ஆகுதியான மாவீரர்களுக்கான வாரம் வருவதைக் கவனத்தில் எடுக்கத் தவறிவிட்டோம். எதுவித உள்நோக்கமுமின்றி நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்கவும் தயாரானோம். அந்தச் சூழ்நிலையில், ரசிகர்களான உங்களில் பலரிடமிருந்தும், மாவீரர்களை நேசிக்கும் உணர்வாளர்களிடமிருந்தும், நிகழ்ச்சியைக் கார்த்திகை மாதத்திலிருந்து மாற்றும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த வேண்டுகோள்களுக்கு எந்தவித எதிர்வுகூறல்களோ, மறுப்புகளோ எங்களிடம் இல்லை. தமிழின மக்களுக்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களை நாங்களும் மதிக்கிறோம், வணங்குகிறோம். அவர்களை நினைவுகூறும் நாட்களில் நிகழ்ச்சியை நடத்துவதில் எங்களுக்கும் சம்மதமில்லை. இருமுறை தள்ளி வைக்கப்பட்ட இந்த நிகழ்வால் ஏற்படும் மாபெரும் செலவீனங்களையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறோம். உங்களிடம் நாம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்பவை இவைதான். 

1. தவிர்க்க முடியாமல் தள்ளிவைக்கும் இந்த நிகழ்ச்சி, நிச்சயம் மீண்டும் , மேலே குறிப்பிட்ட திகதிகளில் நடைபெறும். அதனால், உங்கள் தவறாத பங்களிப்பை எதிர்வரும் தை மாதத்திலும் நாம் எதிர்பார்க்கிறோம். 

2. ஏற்கனவே நுழைவுச் சீட்டைப் பெற்றிருந்தவர்கள், அதே நிழைவுச் சீட்டுடன் தை மாத நிகழ்ச்சிக்கும் வருகை தரலாம். 

3. தவிர்க்க முடியாத காரணம் இருப்பவர்கள், ஏற்கனவே செலுத்திய பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம்.  

மேலே குறிப்பிட்ட விசயங்கள் சம்மந்தமாகக் கேள்விகளோ, சந்தேகங்களோ இருக்கும் பட்சத்தில், [email protected] என்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். 

நுழைவுச் சீட்டுகளை மீளப்பெறுதல், பெயர் மாற்றங்கள் போன்றவற்றிற்கு,[email protected] என்னும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். 
நன்றி

நடைபெற்ற தடைகளுக்கும், சிரமங்களுக்கும் மீண்டும் மன்னிப்பைக் கோரிக்கொண்டு, தை மாத நிகழ்ச்சிகளுக்கு உங்கள் வரவை எதிர்பார்க்கும்:PYS Eventmanagement