

ஈழ இனப்படுகொலை வாரமா?முள்வாய்கால் கஞ்சி வாரமா?
ஈழ இனப்படுகொலை வாரமா?முள்வாய்கால் கஞ்சி வாரமா?-திட்டமிட்ட மடைமாற்றமா?-மே=18 ஆம் நாள் உலகம் எங்கும் பரந்து வாழும் ஈழ உறவுகள் உணர்வு பூர்வமாக தமக்கு இளைக்கப்பட்ட அநீதிக்காக அர்ச்சிக்கும் புனித நாள்….
ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்டு ஈழத் தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட “இனப் படுகொலை” யை நினைவுறுத்தும் உணர்வு நாள்…!முள்ளி வாய்க்கால் என்றதும் சர்வதேச அரங்கில் ஈழத்தின் இனப்படுகொலை படம் பிடித்துக்காட்டும் உயரிய நாள்…!இன்று திட்டமிட்டு மடைமாற்றம் செய்யப்படுகின்றதா? என்பதே ஈழ உணர்வாளர்கள் மனங்களை உருக்கும் செய்தி.முள்ளிவாய்கால் இனப்படுகொலை வாரமாக இதுநாள் வரையில் தமிழ் மக்கள் மனங்களில் அர்ச்சிக்கப்பட்ட வாரம் 2022 இல் முள்ளி வாய்க்கால் கஞ்சி வாரம் என மடை மாற்றப்பட்டுள்ளது.
இது எமது எதிர்கால சந்ததி மத்தியில் தமிழ் இன அழிப்பை மறைத்து சம்பிரதாய நாள் என்ற கருத்தை ஆழ வேரூன்றச் செய்துவிடும்.நீண்டிருப்பது நீதிக்கான கரங்களா? கஞ்சிக்கான கரங்களா?அன்பான உறவுகளே விழிப்பாக இருங்கள்..
முள்ளி வாய்க்கால் இனப்படுகொலை வரமா? அல்லது கஞ்சி வாரமா.. சிரட்டையில் மே 18 என எழுதப்பட்டு கையேந்த வைத்திருக்கிறார்கள்.சரியானதா? தவறானதா? சிந்தியுங்கள் உறவுகளே…!
நன்றி நெடுந்தீவு ஜெயபாலன்








