விடுதலைப் போராட்ட காலத்தில் ((மந்திவில் கடை அக்கா)) என்றால் தெரியாத போராளிகளே இல்லை

246

விடுதலைப் போராட்ட காலத்தில் ((மந்திவில் கடை அக்கா)) என்றால் தெரியாத போராளிகளே இல்லை…..

இன்று தாய் மண்ணை விட்டு பிரிந்து விட்டார் தமிழீழ மண்ணை மீட்பதற்கு போராடிக் கொண்டிருந்த காலத்தில் போராளிகளுக்கு காப்பரனாகவும் ஒரு தாயாகவும் இருந்து போராளிகளை காத்து வந்த தாய் என்று மறைந்து விட்டார். இந்தத் தாய் இந்திய ராணுவத்தின் காலத்தில் போராளிகள் மறைந்து வாழ்ந்த காலம் . அந்தக் காலத்தில் காப்பரனாக இருந்து போராளிகளுக்கு உணவு வழங்கி இந்திய ராணுவத்திடம் இருந்து தலைமறைவாக இருந்த போராளிகளை. வெற்றியாளர்களாக மாற்றுவதற்கு இந்த தாயின் பங்கு மிகப் பெரியது.. தான் மட்டுமல்ல குடும்பத்தோடு விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள். மண்ணை மீட்பதற்கு தன்னுடைய மகனையும் விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்பி வைத்த தாய்.. இந்த வீரத்தாயை 19 90 ஆம் ஆண்டு மணலாற்றில் இருந்து தென்மராட்சிக்கு நானும் என்னுடைய அணி போராளிகளும் சென்று இருந்தோம் அந்தக் காலப்பகுதியில் எங்கள் எல்லோருக்கும் அம்மாள் வருத்தம் வந்து படுக்கையில் இருந்த போது இந்த தாய் தான் எங்களுக்கு சமைத்து உணவு பரிமாறினார். அது மட்டும் அல்ல தொடர்ச்சியாக விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்ததாய். இன்று மறைந்து விட்டார். இந்த தாய் மறைந்தாலும் ஒவ்வொரு போராளிகளின் மனதில் நிலைத்திருப்பார். எங்களுக்கு உணவு வழங்கி பராமரித்த தாய்க்கு.. ஆஞ்ச மலர் கொண்டு அஞ்சலிக்க முடியாத இடத்தில் நாங்கள்..
வீரத் தாய்க்கு எங்கள் அஞ்சலியை செலுத்துகின்றோம்