டெல்லியில் விடுதலைப்புலிகளா அல்லது. இந்திய உளவுப் பிரிவின் கைக்கூலிகளா? நாடு கடந்த தமிழ் அரசாங்கத்திற்கும் இந்தியா உளவு பிரிவு என்ன சம்பந்தம்

273

டெல்லியில் விடுதலைப்புலிகளா அல்லது. இந்திய உளவுப் பிரிவின் கைக்கூலிகளா? நாடு கடந்த தமிழ் அரசாங்கத்திற்கும் இந்தியா உளவு பிரிவு என்ன சம்பந்தம்

கடந்தவாரம் பரபரப்பான செய்திகள் பல ஊடகங்களில் இடம்பெற்றிருந்தன. 35 ஆண்டுகாலத்திற்கு பின்னர் இந்தியாவில் புதுடில்லியில் விடுதலைப் புலிகள்.

அங்கு நடந்த மாநாட்டிலே கலந்து கொண்டவர்கள் விடுதலைப் புலிகளா?…

ஆனால் இதனை நடத்தியவர்கள் இலங்கையை சேர்ந்த ஜனநாயக போரளிகள் கட்சி, பிரித்தானியாவிலிருந்து
நிலா, திவாகரன். நாடுகடந்த அரசின் பிரதிநிதிகள் பிரான்சிலிருந்து கொலின்ஸ். அதனை நெறிப்படுத்தியவர்

மு. திருதாவுக்கரசு என்ற தகவல் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. இவர்கள் எல்லோரும் சேர்ந்துதான் புதுடில்லியில் மூடிய அறையில் இந்த மாநாட்டினை நடத்தியிருக்கின்றனர். இந்த ஜனநாயக கட்சி இதுவரைக்கும் விடுதலைப் புலிகளின் கொள்கையில் இருக்கின்றதா, இல்லையா?. இதற்கு அப்பால்தான் இவர்களை ஊடகங்கள் விடுதலைப் புலிகள் என்று செய்தி வெளியிட்டிருந்தனர்.


இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்கு தடை. தமிழ்நாட்டில் கடவுச்சீட்டு பிரச்சினையில் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் விடுதலைப் புலிகள் என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றனர். திருச்சி சிறப்பு முகாம், புழல் முகாம், சென்னையில் உள்ள சென்றல் சிறைச்சாலை, வேலூர் சிறைச்சாலை என இன்று வரை அப்பாவிப் பொதுமக்கள் விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரல் முழுமையாக சீனாவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முற்று முழுதாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.


ஆகவே இந்தியா தன்நலன் கருதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக இவ்வாறு இந்தியாவில் விடுதலைப் புலிகள் என்ற செய்தியினை திட்டமிட்டு இந்த மாநாட்டினை நடத்தியவர்களை அணுகியிருக்கின்றனர்.
என்னைப் பொறுத்தவரை இந்தாயாவின் உறவுமுறை முறிக்கப்படவில்லை. 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகள் தற்பாதுகாப்பிற்காக இந்தியாவுடன் யுத்தம் புரிந்தனர். ஆனால் இருந்த போதிலும் விடுதலைப் புலிகள் இந்தியா அரசுடன் தடையை நீக்க கூறியிருந்தனர்.


ஆனால் இந்தியா விடுதலைப் புலிகள் இந்தியாவிலே தடை செய்து இல்ககையிலே இருக்க வேண்டும் எனவும் அதுவும் அவர்கள் தாங்கள் சொல்வதை கேட்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தனர். அவ்வாறு அவர்கள் சொல் பேச்சை கேட்கும் புலித்தோல் போற்றிய நரிகளே அங்கு புதிடில்லியில் மாநாட்டினை நடத்தியிருந்தனர்.

இவர்களால் அமர்த்தப்பட்ட விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் இருப்பவர்களது புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதில் எந்த மாற்றுக்கருத்துக்களும் இல்லை. ஆனால் எங்கள் கொள்கை மாறாது. 25 000 மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்திருக்கின்றனர், பல லட்சக்கணக்கான் மக்கள் கொல்லப்பட்டார்கள், நாங்கள் தமிழீழத்தில் அடிமையில்லாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று இவ்வளவு உயிரையும் இழந்து இந்த 30 ஆண்டுகால போராட்டம் நடைபெற்றது.
இந்தியாவிற்கு இதனைத்தான் வலியுறுத்துகின்றோம். ஈழத்தில் நடந்தது இனப்படு கொலைதான் என சர்வதேச ரீதியாகவும், ஐ.நா ஊடாகவும் கூறவேண்டும்.

புது டில்லியிலே நடந்த மாநாட்டிலே விடுதலைப் புலிகள் என்ற போர்வையில் சென்றவர்கள் அங்கே இந்தியாவிற்கு வழங்கிய கோரிக்கைகளை நீங்களே கேட்டு பாருங்கள்

இவர்கள் யாழ்ப்பாண தூதரகத்தில் கேட்க வேண்டிய கேள்வியை புதுடில்லி சென்று கேட்க வேண்டிய அவசியம் என்ன?.

மக்களே இன்று வரை நாங்கள் சர்வதேச நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இவ்வாறான சொந்த காலில் நின்று போராட முடியாமல் சிலர் டக்களஸ் இடமும், கருணாவிடமும், பிள்ளையானிடமும் இருந்து பணம் பெற்றுக் கொண்டு புலி வேசத்தில் புது டில்லி வரை சென்று மகாணாசபையை நிறைவேற்ற நிற்கின்றனர்.


தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தினை கைது செய்கின்ற புதுடில்லி வரை சென்று இவர்கள் நடத்திய மாநாட்டினை ஒரு ஹிந்தி யூரியூபின் ஊடாக அதனை வெளியிட்டிருக்கின்றனர். அதே வேளை அங்குள்ள வீதிகளில் கை கோர்த்தபடி நடந்து திரிந்திருக்கின்றனர் என்றால் இது இலங்கை அரசிற்கு இந்தியாவால் விடப்படும் ஒரு எச்சரிக்கையாகவே காணப்படுகின்றது.

அன்பான உறவுகளே இன்றும் எமது மக்கள் தமது உறவுகளை விடுவிக்க கோரி இலங்கையில் அமைந்துள்ள ஐ.நா சபைக்கு முன்பாக போரடி வருகின்றனர். ஆனால் இவர்கள் இந்தியா உளவுப்பிரிவுடன் இணைந்து மீதமுள்ள தமிழ் மக்களையும் புதைகுழியில் தள்ள திட்டமிடுகின்றனர். இவர்களை நாங்கள் மக்களுக்கு அடையாளப்படுத்துவோம். அத்தோடு இந்தியாவின் இந்த திட்டமிட்ட உளவுத்துறையின் திட்டத்தில் நாடுகடந்த அரசும் இருக்கின்றதா?.

என உருத்திரகுமர் அண்ணா அவர்கள் மக்களுக்கு பகிரங்கமாக அறியத்தர வேண்டும். ஏன் என்றால் நாடுகடந்த அரச பிரதிநிதியும் இதில் கலந்து கொண்டுள்ளார். எதற்காக இவர் அங்கு சென்று அந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டார் என்று கூறியே ஆகவேண்டும்.

ஆனால் நாங்கள் தலைவரின் கொள்கையிலிருந்து சிறிதளவும் பின்வாங்கப்போவதில்லை என்று கூறிக் கொண்டு உங்களிடமிருந்து தற்காலிகமாக விடைபெறும் நான்

கஜன். நன்றி வணக்கம்.