ஐ.நா முன்றலில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய மட்டக்களப்பு நகரபிதா திரு. சரவணபவான்!

114

ஐ.நா முன்றலில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய மட்டக்களப்பு நகரபிதா திரு. சரவணபவான்!

ஜெனிவா ஐ.நா முன்றலில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய மட்டக்களப்பு நகரபிதா திரு. சரவணபவான் அவர்கள்.
(காணொளி இணைப்பு).

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் 51வது கூட்டத்தொடர் ஆரம்பித்த இந்த தினத்தில் அனைத்துலக மனித ஸ்தாபனம் மற்றும் இனப்படு கொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் இந்த மாபெரும் கவனயீர்ப்பு போரட்டத்திற்கு தாயகத்திலிருந்தும் ஏனைய பகுதிகளிலிருந்தும் வருகை தந்த ஆசீர்வாதம் வழங்கிய மதகுருமார், பங்குபற்றுனர்கள், ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் என் அன்பு கனிந்த வணக்கம்.


தமிழர்களது தேசம் வடக்கு, கிழக்கு தமிழர்களது தாயகம் என்ற இந்த கோதாவில் எங்களது தேசத்தை தமிழர்களின் தமிழின அழிப்பை சுதந்திரத்திற்கு பின் பொறுப்பெடுத்த சிங்கள அரசு பல வகைகளில் இந்த இன அழிப்பு செயற்பாடுகளை நடத்திக்பொண்டிருக்கின்றது. அதில் ஒன்று இனப் பரம்பலை பிரதேச ரீதியாக மாற்றுவது. இனப் பரம்பலை பிரதேச ரீதியாக மாற்றுவதற்க்காக அவர்கள் எடுத்த ஒரு முயற்சிதான் குடியேற்றங்கள். கல்லோயா குடியேற்றம் அம்பாறையில் குடியேற்றப்பட்டது. 1966ம் ஆண்டிற்க்கு பின்புதான் அம்பாறை என்ற ஒரு மாவட்டமே உருவானது. அங்கே பெரும்பான்மையாக இருந்த தமிழர்கள் கல்லோயா குடியேற்றத்திட்டத்தின் பின்பு சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர்.

அதேபோல் திருகோணமலையில் பெரும்பான்மையினராக இருந்த தமிழர்கள் சேருவல என்ற பிரதேசத்தை திருகோணமலையுடன் இணைத்ததன் மூலமாக அங்கும் சிறுபாண்மையினர் ஆக்கப்பட்டனர். கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை தழிழர்களாக இருக்கின்ற மாவட்டம் மட்டக்களப்பு அந்த இனப் பரம்பலை மாற்றுவதற்கான முயற்சியில் தற்பொழுது இந்த அரசாங்கம் மிகக் கச்சிதமாக இந்த அரச இயந்திரத்தின் ஊடாக நடைமுறைப்படுத்த முற்படுகின்றது.

அதில் ஒரு அங்கமாகத்தான் எங்களது விவசாயிகளின் 1800க்கும் மேற்பட்ட மேய்ச்சல் தரை நிலங்கள் அங்கே பெரும்பான்மை இனத்தினரால் அபகரிக்கப்பட்டு அங்கிருந்த மக்கள் அந்த மாடுகள் மேய்ப்பதற்க்கு இடமில்லாமல் அவர்களது வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட நிலையில் அந்த பெரும் பிரதேசம் பெரும்பான்மையினரால் சூரையாடப்படுகிறது. அதேபோல மட்டக்களப்பு மாவட்டத்தில் கெவிலியாமடு என்ற பிரதேசத்தில் 1500 க்கும் மேற்பட்ட நிலங்கள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையினரிடம் கையளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல் செங்கலடி என்ற பிரதேசத்தில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் இராணுவத்தினரின் பயிற்ச்சி முகாமாக சுட்டுப்பழகும் இடமாக பிரகடனப்படுத்தப்பட்டு் அங்கே எமது மேய்ச்சல் தரை நிலங்கள் அபகரிக்கப்படுகின்றது. இவ்வாறாக கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டத்திலும் பெரும்பான்மையினரை குடியேற்றுவதன் மூலமாக எங்களது இனப்பரம்பலை மாற்றுவதற்க்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துகொண்டருக்கின்றது. இது சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அடுத்ததாக கௌரவ கோடீஸ்வரன் அவர்கள் கூறியது போன்று காலத்துக்கு காலம் பல இனப் படுகொலைகள், கொத்தணிக் கொலைகள் அம்பாறை மாவட்டத்தில் பல கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 1990ம் ஆண்டு அங்கே எங்களது தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளுக்கு எந்தவிதாமான விசாரணைகளும், நியாயமும் இதுவரை கிடைக்கப்படவில்லை. 90ம் ஆண்டு ஆரம்பித்த அந்த இனப்படுகொலை 90ம் ஆண்டு செப்டம்பருக்கு பின்பு துவங்கியது. அங்கே வந்தாரமூலை படுகொலை, சத்துருகொண்டான் படுகொலை இவ்வாறு பல கொத்தணிப் படுகொலைகள். வந்தாரமூலையில் 186 பேர், சத்துருகொண்டானில் 200க்கும் மேற்பட்டோர். இவ்வாறு கொத்தணி ரீதியக இலங்கை இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களுக்கு எதிரான எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை.

அதேபோல் திருகோணமலையில் பல கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டு அங்கே தமிழர்கள் கடத்தப்பட்டு இன அழிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இறுதியாக எங்களது முள்ளிவாய்க்கால் பேரவலம் இதற்காக பல நாடுகள் மூலமாக முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் ரணில் விக்கிரமசிங்க பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடன் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அந்த நல்லாட்சி காலத்தில் எந்தவிதமான முன்னெடுப்புக்களும் ரணில் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படவில்லை. அதற்குப் பின் வந்த கோத்தாபாயாவின் அரசு இன அழிப்பே நடைபெறவில்லை என்றும் தமிழர்களுக்கு பிரச்சினை சோறுதான் என்றும் சொல்லி எங்களது தூய்மையான இந்த இனப்பிரச்சினையை கொச்சைப்படுத்திக் கொண்டிருந்தது. தற்பொழுது ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பதவியேற்றிருக்கின்றார்.

ஆனால் அவருக்கு துணையாக இருப்பது அந்த மொட்டுக் கட்சியின் ஆதரவு. எனவே இந்த மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சிப்பீடம் ஏறிய இந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி மூலம் நாங்கள் நேர்மையான ஒரு நியாயமான தீர்வை எதிர்பார்க்க முடியாது. எனவே நாங்கள் சர்வதேசத்திடமிருந்துதான் நியாயமான தீர்வை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது.

எனவே மனிதாபிமானமுள்ள இந்த ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் இந்த விடயத்தில் மிகக் கண்ணியமான முறையில் நடந்துகொண்டு எங்களது தமிழர்களுக்கு எதிராக நடக்கப்பெற்ற, நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற இந்த திட்டமிடப்பட்ட இனப்படு கொலைக்கு நியாயமான தீர்வு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது இந்த ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்தும் பொறுப்பாக இருக்க வேண்டியது. பொறுப்புக் கூறலில் எங்களது இலங்கை அரசாங்கம் முற்போக்கான எந்தவித செயற்பாடுகளை இதுவரை ஆரம்பித்ததில்லை. எனவே இந்த 51வது கூட்டத்தொடரில் இங்கிலாந்தும் அமெரிக்காவும் சேர்ந்து கொண்டுவருகின்ற இலங்கைக்கு எதிரான இந்த பிரேரணை அதற்கு இந்த ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் ஆதரவு வழங்குவதோடு ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் ஒரு குறுகிய வரையறை எல்லைக்குள் எங்களது பிரச்சினைக்கான நீதியான தீர்வை பெறுவதற்கு தங்களது அழுத்தத்தை கொடுப்பதோடு தமிழர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு இவ்வாறான செயற்பாடுகளை செய்யும் போதுதான் எமக்குத் தேவையான எமது பிரச்சினைகளை நாங்கள் வென்றுகொள்ளக் கூடியதாக இருக்குமென்று கூறி இந்த சந்தர்ப்பத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி.
வணக்கம்.

அனைத்து உலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் மற்றும். இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு