ஐ.நா முன்றலில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய கலாநிதி , எஸ். கணேஸ். !

155

ஐ.நா முன்றலில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய கலாநிதி , எஸ். கணேஸ்.!

ஜெனிவா ஐ.நா முன்றலில் தமிழ் இன அழிப்புக்கு நீதி கோரி உரத்த குரல் எழுப்பிய அம்பாறை மாவட்ட   மாணவ மீட்புப் பேரவைத் தலைவர், மனித உரிமை செயற்பாட்டாளர், பொறியியலாளர், கலாநிதி , எஸ். கணேஸ்.


ஈழ தேசத்தின் அழுகுரலுக்காய் அயராது களமாடுகின்ற என் உயிரிலும் மேலான தமிழ் சொந்தங்களே, நான் தென்தழிழ் ஈழத்திலருந்து ஒரு வாரிசாக இந்த ஐக்கிய நாடுகள் சபையினுடைய முருகதாசன் திடலிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற. இன அழிப்பிற்கு நீதி கோருகின்ற இன்றைய இந்த நிகழ்விலே ஈழத்திலே இருந்து வருகை தந்த என்னோடு சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற என் சக நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்த நிகழ்வை சிறப்புற நடத்திக் கொண்டிருக்கின்ற அனைத்துலக மனித உரிமை ஸ்தாபனத்தினுடைய அனைத்து உறுப்பினர்கள், பெரியோர்கள் மற்றும் தாயகத்திலே தமிழீழத்திலே இருந்து வருகை தந்திருக்கின்ற இனப் படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 இனப் படுகொலை என்பது தேசிய இனமொன்றின் வாழ்வை தாங்கி நிற்கும் முக்கிய மூல உதாரணங்களை சிறப்புற சொற்பதம் கொடுக்கின்றது. அந்த இனம் தாமாகவே துடைத்தெறிந்து போவதை நோக்கமாகக்கொண்டு ஒருங்கிணைக்கும் நடவடிக்கைதான் இனப் படுகொலை என லெஸ்வீன் அவர்கள் வரைவிலக்கணம் கொடுக்கின்றார். இந்த இனப் படுகொலையானது வெறுமனவே உயிரியல் காரணம் மட்டுமன்றி பௌதீக அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார பிரிவினைகளை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அந்த அடிப்படையிலே இலங்கை என்கின்ற நாட்டிலே 1948ம் ஆண்டு சுதந்திரமடைந்ததாக கூறிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் அந்த சுதந்திரமடைந்த காலம் தொட்டு இன்று வரைக்கும் தமிழ் இனத்தின்மேல் ஆறாத வடுக்களாக அக்கினிக் காம்புகளாக மிக மோசமான முறையிலே இனப் படுகொலை நடந்தவண்ணம்தான் இருக்கின்றது. 1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையினுடைய பன்னாட்டு நடைமுறை வரைபானது தனது 260வது இலக்க தீர்மானத்தின் ஊடாக இனப் படுகொலையை ஒரு பன்னாட்டு குற்றம் என அது உறுதிப்படுத்துகின்றது.

அந்த அடிப்படையை பார்கின்ற பொழுது 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததாக கூறினாலும் 1950 ஆண்டு அதாவது அடுத்த இரண்டு வருடங்களிலே இந்த சிங்களப் பேரினவாதம் மிக மோசமாக இன அழிப்பில் இறங்கியது. அதுதான் 1950ம் ஆண்டு தென்தமிழீழழ் என வர்ணிக்கப்படுகின்ற அம்பாறை மாவட்டத்திலே கல்லோயா என்கின்ற குடியேற்றத்தைக் கொண்டு வந்து ஏறத்தால ஒரு லட்சத்து அறுபதினாயிரம் ஏக்கர்களை சூரையாடினார்கள்.

அந்த சூரையாடிய ஒரு லட்சத்து அறுபதுனாயிரம் ஏக்கர்களிலே 50 குடியேற்ற கிராமங்கள் ஸ்தாபிக்கப்பட்டது. அங்கே ஸ்தாபிக்கப்பட்ட குடியேற்றங்கள் அனைவரும் எங்களுக்கு எதிராக செயற்படத் தொடங்கினார்கள். தென்தமிழீழம் என வர்ணிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் சுருங்கத் தொடங்கியது.

அந்த காலப்போக்கிலே ஏறத்தால 1911ம் ஆண்டு இலங்கையினுடைய அம்மாறை மாவட்டத்தை நாங்கள் பார்க்கின்ற பொழுது வெறுமனவே 7% ஆக இருந்த சிங்களவர்கள் தற்பொழுது கிட்டத்தட்ட 39% ஆக அதிகரித்து இருக்கின்றார்கள்.

அந்த காலத்தில் 24% ஆக இருந்த நாங்கள் தற்பொழுது 18% ஆக மிக மோசமான நிலைக்கு குறைந்திருக்கின்றோம். அதைத் தொடர்ந்து இந்த பேரினவாத அரசாங்கம் 1956ம் ஆண்டு மொழிச் சட்டம் என்கின்ற ஒரு சரத்தைக் கொண்டு வந்து எங்களுடைய மொழியை சீரழிக்கவும், எங்களுடைய மொழியை இல்லாமல் ஆக்கவும் மிகவும் மோசமாக பிரயாசைப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து தாயகத்திலே வடகிழக்கிலே முழுமையாக பல நூற்றுக்கணக்கான படுகொலைகள் நடந்தேறின. அவை சொல்லுவதற்கு இந்த அரங்கிலே நேரம் காணாது என்று நினைக்கின்றேன்.

அதை தொடர்ந்து யாழ் நூலக எரிப்பு என மிக மோசமானதொரு புத்தகங்கள் எங்கள் அறிவு பொக்கிஷங்கள் எரியூட்டப்பட்டது. அதை தொடர்ந்து முல்லைத்தீவு, திருகோணமலை உற்பட்ட பிரதேசங்களிலே எங்களுடைய  நிலத்தொடர்பை பிரிப்பதற்காக சிங்களப் பேரினவாதம் எங்களுடைய நிலங்களை சுரண்டி மிக மோசமான கைங்கர்யத்திலே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

அவர்களுடைய நோக்கம் என்னவென்று சொன்னால் வடக்கையும் கிழக்கையும் தனியாகப் பிரித்து தமிழர் தாயகத்தை இல்லாது ஓழிப்பதுதான் அவர்களுடைய முழுமையான நோக்கமாக இருக்கின்றது. இதே போன்றுதான் 2009ம் ஆண்டு ஏறத்தால ஒரு லட்சத்து நாற்பத்தாறாயிரத்து அறுநூற்று எழுபத்து ஒன்பது பேரை பலவந்தமாக வலிந்து காணாமல் ஆக்கியிருக்கிறார்கள்.

அவர்களுக்கான நீதியையும் நாங்கள் கோரி நிற்கின்றோம். ஆகவே இந்த சிங்களப் பேரினவாதத்தினுடைய இந்த நடவடிக்கைகளை எதிர்த்து தங்களுடைய பிள்ளைகளை தரும்படி கோரி வடக்கிலே எமது அன்புக்குரிய தாய்மார்கள் ஏறத்தால இரண்டாயிரம் நாட்களையும் கடந்து போராடி வருகின்றார்கள். ஆனால் இன்று  வரைக்கும் எந்த விதமானதொரு சிறிதளவேனும் ஒரு தீர்வை வழங்குவதற்கு இந்த சிங்களப் பேரினவாதம் தயாராக நிற்க்கவில்லை. ஆனால் இவ்வகையான நிலைமைகள் சர்வதேச அரங்குகளிலே, சர்வதேச நாடுகளிலே நடைபெறுகின்ற பொழுது அவற்றை அவர்கள் இனப் படுகொலை என வர்ணிக்கின்றார்கள். றுவாண்டாவில் நடந்தப்பட்டதோ ஒரு இனப் படுகொலை என்கின்றார்கள்.

ஆர்மேனியாவில் நடத்தப்பட்டது ஒரு இனப் படுகொலை என்கின்றார்கள். கிழக்கு தீமோரில் நடைபெற்றது ஒரு இனப் படுகொலை என்கின்றார்கள். ஜேர்மனில் நாசிஸ் செய்யதது ஒரு இனப் படுகொலை என சொல்லப்படுகின்றது. யூகொஸ்லாவியாவில் நடத்தப்பட்ட மனித குலத்திற்கு எதிரான குற்றத்திறக்கு அவர்களும் அதையே கேட்டு நிற்கின்றார்கள். ஆகவே இந்த சூழ்நிலையிலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் மியன்மாரிலே ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக நடக்கப்பட்ட அந்த அநீதிக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலே 2017ம் ஆண்டு Fact-finding mission எனப்படுகின்ற ஒரு நிபுணர் குழுவினுடைய சரத்தை அமுல்படுத்தி அதனூடாக அந்த மக்களுக்கு இனப் படுகொலை என்ற தீர்ப்பாயத்திற்கு செல்வதற்கான வழிகளை அமைத்தார்கள்.

அதேபோன்று 2016ம் ஆண்டு சிரியா நாட்டிலே நடைபெற்ற அந்த மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக ஐக்கிய நாடுகளினுடைய பொதுச்சபையிலே ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு அதுவும் தற்பொழுது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த நிலையிலேதான் தற்பொழுது உக்கிரைனில் நடந்து கொண்டிருப்பதோ ஓர் இனப் படுகொலை என்ற சொல்லாடலுக்கு உட்படுத்தியிருக்கிறார்கள். ஆகவேதான் இந்த உயரிய சபையிலே நாங்கள் எங்களுடைய விண்ணப்பங்கள் என்வென்று சொன்னால் IIIM எனப்படுகின்ற அந்த நிபுணத்துவம் வாய்ந்த பெரியோர்களை நியமித்து எங்கள் மக்களுக்கு எதிராக ஓர் விசாரணை பொறிமுறையையும் ICT எனப்படுகின்ற ஒரு குற்றவியல் பொறிமுறையையும் உருவாக்கும்படி நாங்கள் இந்த உலகில் இருக்கின்ற இந்த பெரும் அவையை நாங்கள் வேண்டுக்கொள்கின்றோம்.

நாம் தொடர்ந்தும் சிங்களப் பேரினவாதத்தினுடைய இந்த வரம்புக்குள்ளே சிக்குப்பட்ட மிக மோசமான முறையிலே நாங்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். தற்பொழுது இலங்கை அரசாங்கமானது பொருளாதர நெருக்கடியிலே இருப்பதாக கூறிக்கொண்டு எங்களுக்கான தீர்வை மிகவும் கால தாமதப்படுத்தி அதிலே எந்தவிதமான ஒரு நடவடிக்கைகளையும் கையாளாது எங்களை ஏமாற்ற முற்பட்டிருக்கிறார்கள். எங்களுடைய வரலாறுகளை நாங்கள் எடுத்துப் பார்க்கின்ற பொழுது எங்களுடைய எத்தனை விதமான  பேச்சுவாரத்தைகள் உள்நாட்டு சர்வதே ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்த பேரினவாத சிங்கள அரசாங்கம் கிழித்தெறிந்து எங்களை மிகவும் ஒடுக்கி அடக்கி ஆள விரும்புகின்றது. ஆகவே இந்த சூழ்நிலையிலே தமிழ் மக்களாகிய நாங்கள் மிக உண்ணிப்பாக உற்று எங்களுடைய அடுத்த தலைமுறையினர் இந்த அவையிலே எங்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளை நாங்கள் நகர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

சீன தேசத்திலே மாசேதுங் ஒரு சமுதாயத்தை அமைத்தார் அது சிவப்பு சமுதாயம். அமெரிக்காவிலே மார்ட்டின் லூதர் கிங் ஒரு சமுதாயத்தை அமைத்தார் அது கருப்பு சமுதாயம். ஆனால் உலகம் பூராகவும் பரப்பிக்கிடக்கின்ற எமக்கு தமிழர் என்கின்ற ஒரு அடையாளத்தை தந்தவர்தான் எங்கள் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். ஆகவே அவருடைய விருப்பமாக இருப்பது எமக்கான ஒரு தேசமும் எமக்கான ஒரு சுயநிர்ணய ஆட்சியுமாக இருக்கின்றது.

அந்த அடிப்படையிலே அவர் வழிகாட்டிச் சென்ற எமக்குடையதான ஒற்றுமை, கல்வி வளர்ச்சி, எம்முடைய வளம் பலம் அனைத்தையும் பயன்படுத்தி இந்த உலகத்திலே  மிக சிறந்ததொரு தேசமாக எங்கள் தேசம் மிளிர வேண்டும் என்று கூறிக் கொண்டு அதற்கான நீதிக்கான பொறிமுறைகளை நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக விட்டுச்செல்ல வேண்டும் என்று கூறிக் கொண்டு தமிழர்களின் தாகம் தீர்க்க என்றும் நாங்கள் உங்களோடு சேர்ந்து பயணிப்போம் உங்களுக்கு

நன்றி கூறி விடைபேறுகின்றேன்.நன்றி.

அனைத்து உலக மனித உரிமை சங்கம் பிரான்ஸ் மற்றும். இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் கூட்டமைப்பு