முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் .முருகனும் தமிழும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு இடம்பெற்றது.

106

முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் .முருகனும் தமிழும்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் பா.பார்த்திபன் அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றது.

பிரான்ஸ் வில்நெவ் சென் ஜோர்ஜ் எனும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வேலணை பெருங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி 2ம் நாள் விரத பூசை 27.10.2022 வியாழக்கிழமை மாலை ஆலயத்திலே மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேகம், விஷேட பூசை என்பன நடைபெற்று கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு உகந்ததான கந்த சஷ்டி கவசம் பாடினர்.

அதனைத் தொடர்ந்து “முருகனும் தமிழும்” என்ற தலைப்பில் ஊடகவியலாளர் பா.பார்த்திபன் அவர்களின் சொற்பொழிவு இடம்பெற்றது.

சொற்பொழிவைத் தொடர்ந்து ஆலய பிரதம குருக்கள் பொன். வரதராஜ குருக்கள் அவர்களால் சொற்பொழிவாற்றிய பா.பார்த்தீபன் அவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்திப் பாமாலையுடன் பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் வீதியுலா வலம் வந்து இருப்பிடத்தை அடைந்ததும் அடியவர்களுக்கு வீபூதி பிரசாதம் வழங்கப்பட்டு அன்றைய தினம் கந்த சஷ்டி பூசையானது இனிதே நிறைவடைந்தது.

அனைவரும் வருக அவன் அருள் பெறுக.