முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி 3ம் நாள் பூசை

87

முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி 3ம் நாள் பூசை

பிரான்ஸ் வில்நெவ் சென் ஜோர்ஜ் எனும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வேலணை பெருங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி 3ம் நாள் விரத பூசை 28.10.2022 மாலை ஆலயத்திலே மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விசேட அபிஷேகம், விஷேட பூசை என்பன நடைபெற்று கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் முருகப்பெருமானுக்கு உகந்ததான கந்த சஷ்டி கவசம் பாடினர். அதனைத் தொடர்ந்து அதனைத் தொடர்ந்து பக்திப் பாமாலையுடன் பக்தர்கள் புடைசூழ முருகப்பெருமான் வீதியுலா வலம் வந்து இருப்பிடத்தை அடைந்ததும் அடியவர்களுக்கு வீபூதி பிரசாதம் வழங்கப்பட்டு அன்றைய தினம் கந்த சஷ்டி பூசையானது இனிதே நிறைவடைந்தது.

அனைவரும் வருக அவன் அருள் பெறுக.