தாயார் உமாதேவியாரிடம் முருகப் பெருமான் சக்தி வேலினை வாங்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடை பெற்றது!

98

தாயார் உமாதேவியாரிடம் முருகப் பெருமான் சக்தி வேலினை வாங்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடை பெற்றது!

வில் நெவ் சென் ஜோஸ்” பிரான்ஸ் என்னும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வேலணை பெருங்குளம்

ஸ்ரீ முத்துமாரி அம்பாள்ஆலயத்தில் ஐப்பசி மாத கந்த சஷ்டி விரத பூஜை மாலை 29.10.2022 சனிக்கிழமை 4ம் நாள் மாலை 07.00 மணிக்கு ஆலய மண்டபத்தில் கந்த சுவாமிக்கு விஷேட அபிஷேகம் விஷேட பூசை என்பன நடைபெற்று

பல நூற்றுக்கணக்கான விரத காரர் பவித்திரம் அணிந்து கந்த சஷ்டி கவசம் படித்து அதனை தொடரந்து வனவல்லி சுந்தர வல்லி சமேத சுப்பிரமணிய சுவாமி பக்தர்களின் பஜனை விருந்துடன் சுவாமி வீதி ஊலா வந்து கந்த சஷ்டி விரதத்தின் முக்கிய நிகழ்வான தாயார் உமாதேவியாரிடம் முருகப் பெருமான் சக்தி வேலினை வாங்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடை பெற்றது

இந்த நிகழ்வு இந்தியாவிலே உள்ள சிக்கல் சிங்கார வேலன் ஆலயத்தில் மிக சிறப்பாக நடைபெறும் முருகப்பெருமான் தாய் பார்வதியிடம் சக்தி வேலினை பெறும்போது முருகப்பெருமானின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை துளிகள் அவரின் முகத்தில் தோன்றும் இர்த நிகழ்வு இன்று வரைக்கும் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது பக்தர்கள் பூவும் தண்ணீரும் கொண்டு முருகனை வலம் வந்து கும்பத்தில் போட்டு பின் வீபூதி பிரசாதம்
வழங்கப்பட்டது


அன்புடன் பொன் வரதராஜ குருக்கள்
ஆலய ஸ்தாபகர்