முத்துமாரி அம்பாள் ஆலயத்திலே.முருகப்பெருமானுக்கும் சூரனுக்கும் இடையே சூரசம்காரம் சிறப்பாக நடைபெற்றது.

95

முத்துமாரி அம்பாள் ஆலயத்திலே.முருகப்பெருமானுக்கும் சூரனுக்கும் இடையே சூரசம்காரம் சிறப்பாக நடைபெற்றது.

பிரான்ஸ் வில்நெவ் சென் ஜோர்ஜ் எனும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் வேலணை பெருங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்திலே முருகப்பெருமானுடைய கந்த சஷ்டி இறுதி நாளான 30/10/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சூரன் போரானது மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாலை நேர பூசையானது முருகப்பெருமானுக்கு விசேட அபிசேகத்துடனும் விசேட பூசையுடனும் ஆரம்பமாகியது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் புடைசூழ முருகப்பெருமானுக்கும் சூரனுக்கும் இடையே சூரசம்காரம் ஆனது மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சூரன் போரை தொடர்ந்து சூரனை வென்ற எம்பெருமானுக்கு பாலபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்த அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு கந்த சஷ்டியின் இறுதிநாள் பூசையானது அன்றைய தினம் இனிதாக நிறைவடைந்தது.