கோடலிகல் (டடி) முகாம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழுவினர் விடுக்கும் அறிக்கை.

144

கோடலிகல் (டடி) முகாம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழுவினர் விடுக்கும் அறிக்கை.

அன்பார்ந்த தமிழ் மக்களே!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியிலுள்ள கோடலிகல் டடி முகாம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழுவினர் விடுக்கும் அறிக்கை.

இந்த துயிலுமில்லம் 1988ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த துயிலும் இல்லத்தில் நூற்றுக்கணக்கான வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது கோடாலிகல் துயிலுமில்லம் அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளது

இந்திய இராணுவத்தினருடனான மோதலின்போது வீரச்சாவடைந்தவர்களின் வித்துடல் இங்கு விதைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு பகுதியிலுள்ள கோடலி கல் டடி முகாம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழுவினர் விடுக்கும் அறிக்கை.


மாவீரர்நாள் ஏற்பாட்டு குழுவின் வேண்டுகோள். வழமைபோல் கோடாலி கல் மாவீரர் துயிலுமில்லம் இம்முறையும் மாவீரர்நாள் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு சில நீதிமன்ற தடைகள் இருந்ததன் அடிப்படையில் நாம் சட்டத்தினை மதித்து அந்த காட்டினுள் செல்லவில்லை. காரணம் அந்த துயிலுமில்லமானது வீதியிலிருந்து 2 மையில் தூரத்தில் காட்டினுள் அமைந்துள்ளமையால் சில நீதிமன்ற சட்டச்சிக்கல் இருந்தன. அதற்கு இணங்க நாம் கடந்த ஆண்டு மாவீரர்நாள் ஏற்பாடுகள் அங்கு செய்யவில்லை.

இந்த ஆண்டு மாவீரர்நாள் செய்வதற்குரிய ஏற்பாடுகள் ஒழுங்குகள் செய்துகொண்டிருக்கின்றோம். வழமைபோல் பயண ஏற்பாடு, உணவு ஏற்பாடு என மக்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. எனவே எமது தாயக உறவுகளே இந்த கோடாலி கல் மாவீரர் துயிலுமில்ல குழு ஏற்பாட்டாளர்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது.

இந்த மாவீரர் துயிலுமில்லம் சார்ந்து புலம்பெயர் நாட்டிலிருந்தோ அல்லது உள்நாட்டிலோ யாராவது தங்களிடம் பணம் கேட்டால் நீங்கள் எவ்வித பணமும் செலுத்த தேவையில்லை. அதற்குரிய பணங்களை நாங்களே ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம் என்பதனை உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

அதற்கு அப்பால் தொடர்ச்சியாக அதனை செய்துவரும்போது அதற்கு தேவையான உபகரணங்கள் எல்லாம் நாங்கள் வைத்திருக்கின்றோம். எனவே யாரும் பணங்களை கொடுத்து ஏமாறாதீர்கள். நாங்கள் உங்களுக்கு அறியத்தருகின்றோம்.

கோடலிகல் (டடி) முகாம் மாவீரர் துயிலுமில்லம் ஏற்பாட்டு குழுவினர் விடுக்கும் அறிக்கை. நன்றி.

மேலதிக தொடர்புகளுக்கு 00 94 77 76 05 714 00 33 75 80 87 084