அத்திபாரங்கள் தாங்கும் கோடலிக்கல் விதைநிலம்

185

அத்திபாரங்கள் தாங்கும் கோடலிக்கல் விதைநிலம்

கார்த்திகை மாதம் எங்கள் காவல் தெய்வங்களின் புண்ணிய நாளான மாவீரர் நாளை நோக்கி நகர்கின்றது.மண்ணுக்காய் களமாடிய அந்த மகத்தான வீரர்கள் உறைகின்ற கல்றைகள் துயிலுமில்லங்கள் தாயகத்தில் சிங்கள பேரினவாதத்தால் உடைக்கப்பட்ட போதும் தங்கள் நெஞ்சில் குடியிருக்கும் மாவீரர்களை அவர்களை விதைத்த விதை நிலத்தில் சுடரேற்றி வணங்க மக்கள் தயாராகி வருகின்றார்கள்.துயிலுமில்ல நிலங்கள் மக்களால் தூய்மைப்படுத்தப்பட்டு வணக்கத்திற்கு ஏற்றவாறு அடுக்குகளை செய்து வருகின்றார்கள்.

அந்த வகையில் முல்லைத்தீவு அடர்ந்த கானகத்தில் விதைக்கப்பட்ட மாவீரர்களை தாங்கும் கோடாலிக்கல் துயிலுமில்லத்திலும் சிறப்பாக மாவீரர்களுக்கு சுடரேற்றி வணங்க முன்னாயத்தங்கள் நடைபெறுகின்றன.


கோடாலிக்கல்லின் முக்கியத்துவம் என்ன.விடுதலைப்போராட்டம் கட்டியெழுப்பப்பட்ட ஆரம்ப காலத்தில் குறிப்பாக எண்பதுகளின் பிற்பகுதியிலும் தொண்ணூறுகளின் முற்பகுதியிலும் எதிரிகளை சொற்ப போராளிகளை கொண்டு கரந்தடித்தாக்குதல் செய்து வெற்றிகளை சிறுசிறுக குவித்த காலத்தில் உயிர்ஈந்த மாவீரர்கள் அநேகம் பேர் இந்த கோடாலிக்கல் துயிலுமில்லத்தில்தான் விதைக்கப்பட்டுள்ளார்கள்.

அதில் தனிமனித சரித்திரங்களாய் எதிரிகளை எதிர்கொண்டு தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கெரில்லா புலிவீரர்கள் அநேகர்.எதிரிபடைகளுடனான சண்டையில் வீரச்சாவடைந்த மாவீரர்களை அன்றைய காலத்தில் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு கொண்டு சென்றும் அவர்களுடைய பெற்றார் உறவுகளுக்கு காட்டியும் இறுதி வணக்கம் செய்யமுடியாதபடி ஊர்கள் இராணுவமயமாக இருந்தன அச்சந்தர்ப்பத்தில் தாயகத்தில் எங்கெங்கோ ஊர்களில் பிறந்து வன்னிக்குள் களமாடிய மாவீரர்களை இந்த கோடலிக்கல் ஒரு தாயாய் அரவணைத்து சுமக்கின்றது.

அதனால் கோடலில்கல் துயிலுமில்லம் வரலாற்று பெறுமதிமிக்கது அத்திபாரங்களை தாங்குவது.அது எமது விடுதலைப்போராட்டத்தின் எச்சங்களின் தொன்மை.அந்த தொன்மநிலத்தை அதிகம் மதிப்பளித்து போற்றவேண்டியது தமிழ் மக்கள் அனைவரினதும் தலையாய கடமை.

தற்பொழுது துரிதகதியில் மிகவும் சிறப்பாக கோடலிக்கல்லில் இம்முறை மாவீரர்நாட்களை அனுட்டிக்க ஏற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு வேலைகள் நடைபெறுகின்றன. தாயகத்தில் சகல மாவட்டங்களிலும் இந்த கோடலிக்கல் துயிலுமில்லத்தில் அன்று விதைக்கப்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள் உறவுகள் வசிக்கின்றார்கள் அவர்களை தேடிகண்டுபிடித்து அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்திக்கொடுத்து தங்கள் பிள்ளைகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த வருகின்றார்கள்

விதானை கஜன்
நன்றி

1988 இல் கோடாலிகள் டாடி முகம்


ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசாவோடு பேச்சு வார்த்தைக்கு செல்லும்போது எடுக்கப்பட்ட

நிழல் படம்