மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் மூங்கிலாறு மட்டு அம்மாறை மாவீரர் மண்டபத்தில்!

220

மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள்
மூங்கிலாறு மட்டுஅம்மாறை மாவீரர் மண்டபத்தில்

உடையார்கட்டு பிரதேச நினைவேந்தல் கட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மூங்கிலாறு திரு மட்டுஅம்மாறை மாவீரர் மண்டப வளாகத்தில் 16.11.2022 இன்றைய தினம் காலை 10:30மணிக்கு கௌரவ பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பொதுச்சுடரினை நான்கு மாவீரர்களின் தாயாரும் எல்லைப்படை வீராங்கனையுமான ஜோசப் முணியம்மாவும் கடற்புலிகளின் முக்கிய போராளியுமான அச்சுதன் அவர்களும் இனைந்து ஏற்றிவைத்தனர்

தொடர்ந்து ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரனும் நாட்டுப்பற்றாளரின் மகனும் முன்னாள் போராளியுமான வேலுப்பிள்ளை மாதவமேயரும், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் இளைஞர் அணி தலைவர் யூட்சனும் சமூக செயற்பாட்டாளர் உதயனும் இனைந்து ஆரம்பித்து வைத்ததுடன்

மலர்வனக்கத்தினை முன்னாள் போராளியும் சமூக செயற்பாட்டாளருமான ரவி ஆரம்பித்து வைத்ததுடன்

மாவீரர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் மலர்வணக்கம் செலுத்தினார்கள்.

நினைவுரைகளை வேலுப்பிள்ளை மாதவமேயரும்
கடற்புலிகளின் முக்கிய போராளியுமான அச்சுதனும்
வழங்கினார்கள் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்களுக்கு பயன்தரு தென்னைமரக் கன்றுகளும் மதிய உணவும் வழங்கப்பட்டு நன்றியுரையுடன் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் நிறைவு பெற்றது