அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

92

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த யுத்த காலத்தில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களது வித்துடல்கள் விதைக்கப்பட்ட அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வருடம் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற ஏற்ப்பாடுகள் செய்யப்படவுள்ளன.

துயிலும் இல்ல வளாகத்தை முற்றாக ஆக்கிரமித்துள்ள 24 ஆவது சிங்க ரெஜிமண்ட் படையினர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வீதி ஓரத்தில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந் நிலையில் இன்று 17.11.2022 சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிரமதான பணிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை அப்பகுதிக்கு வருகைதந்த புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டிருந்தனர்.