கோடாலி கல்லு துயிலும் இல்லம் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பமாகியது.

59

கோடாலி கல்லு துயிலும் இல்லம் தூய்மைப்படுத்தும் பணிகள் நேற்று ஆரம்பமாகியது.


1988ம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாமில் சிறு தொகை போராட்ட வீரர்கள் வாழ்ந்து வந்தார்கள். எமது தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் கட்டளையின் அடிப்படையில் போராளிகள் எந்த இடத்தில் வீரச்சாவு அடைகின்றனரோ அவர்கள் இருந்த அந்த கோடாலி கல்லு முகாமில்தான் வித்துடல்கள் விதைக்கப்பட வேண்டும் என்பதற்கு இணங்க 1989ம் ஆண்டு முற்பகுதியில் இந்திய இராணுவத்துடன் போரிட்டு வீரச்சாவடைந்த மாவீரர்களின் வித்துடல்கள் இந்த கோடாலிக் கல்லு முகாமிலே விதைக்கப்பட்டது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட முதலாவது துயிலுமில்லம் இதுவாகும். இவ்வாறு 1990 ஆண்டிலிருந்து பல்வேறு இடங்களிலும் துயிலுமில்லம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கோடாலி கல்லு முகாமில் வாழ்ந்த வீரர்களில் போராட்டத்தின் போது ஒரு சில வீரர்களே உயிர்தப்பினர். இவ்வாறு உயிர்தப்பிய வீரர்களின் மேற்பார்வையின் கீழ் “துயிலுமில்ல குழு” என்று ஒரு குழுவினை உருவாக்கி இத் துயிலுமில்லத்தினை பராமரித்து வருகின்றனர்.

இந்த துயிலுமில்லத்தில் விதைக்கப்பட் மாவீரர்கள் பல்வேறு தமிழீழ மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். இவர்களின் உறவினர்கள் ஒவ்வொரு வருடமும் இத் துயிலுமில்லத்திற்கு வருகை தந்து வீரச்சாவடைந்த தம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்த இத் துயிலுமில்லத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு வருகை தருகின்ற உறவுகளுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. அந்த வகையில் இவ் வருடமும் அதாவது 2022ம் ஆண்டும் விசேட பயண ஒழுங்குகள், உணவுகள் மட்டுமன்றி மின்சார வசதி போன்று மக்களுக்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இத் துயிலுமில்லத்திற்கென சுமார் 5 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான மின் ஆக்கி (generator) வழங்கப்பட்டள்ளது. அது மட்டுமன்றி அதற்கு சம்பந்தமான 2 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென ஏற்படுகின்ற செலவுகள் அனைத்திற்கும் தேவையான நிதியினை அரசியல் கட்சிகளிடமோ. வெளிநாட்டு நிறுவனங்களிடமோ பெற்றுக்கொள்ளவில்லை. இதற்குரிய செலவினை அனைத்துலக மனித உரிமைச்சங்கத்தின் ஊடாகவே வழங்கப்பட்டுள்ளது.

இத் துயிலுமில்லமானது எவ்விதமான அரசியல் தலையீடுகளோ எந்த வித கட்சி தலையீடுகளுமோ இன்றி முழுவதும் மாவீரர் குடும்பங்களுடன் இணைந்தே இன்றுவரைக்கும் அஞ்சலிக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்க

.

எதிர்வருகின்ற 27ம் திகதி நடைபெறுகின்ற மாவீரர்நாள் அந்த இடத்தின் அதிகாரிகளின் சட்டதிட்டத்திற்கு அமைவாக நடைபெற இருக்கின்றது.
இத் துயிலுமில்ல மாவீரர்களின் உறவுகள் எங்கிருந்தாலும் கீழ்காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு உங்கள் அனைவரையும் அஞ்சலி செலுத்த வருமாறு அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றோம்.
கோடாலி கல்லு துயிலுமில்ல பணிக்குழு.நன்றி