சந்தோஷ் நாராயணன் அவர்களே இப்படியான தவறுகளை இனிமேலும் விடாதீர்கள்

271

சந்தோஷ் நாராயணன் அவர்களே இப்படியான தவறுகளை இனிமேலும் விடாதீர்கள்

ஓ மரணித்த வீரனே என்ற பாடலை மாவீரர்நாள் அன்று மேடையில் இசையமைப்பாளரும் பாடகருமாகிய சந்தோஷ் நாராயணனும் அவருடன் இணைந்து தீ என்ற பாடகியும் இணைந்து பாடினர். ஆனால் அவர்கள் அந்த பாடலை பாடிய விதம் மிக மிக வேதனை தருகின்ற விடயமாக இருந்தது.

ஏன் என்றால் அவர்கள் அந்த பாடலின் இசையையும், மெட்டினையும் மிக மோசமான முறையில் மாற்றி பாடியதே காரணமாகும். அதாவது ஒரு இசை கச்சேரி, திருமணவைபவங்கள், போன்ற நிகழ்ச்சிகளில் பாடுவது போன்று பாடுகின்றனர்.
மாவீரர்நாள் பாடல் என்பது மாவீரர்கள் வீரச்சாவடைந்து அவர்களை தோலில் சுமந்து கொண்டு சென்று அவர்களை விதைக்கும் போது இந்த பாடலினை பாடுவார்கள்.

உறவுகளே! இந்த மாவீரர்நாள் பாடல் என்பது 1989, 1990 ஆண்டு காலப்பகுதிகளின் பின்னர் துயிலுமில்ல பாடல்கள் வந்தன. மணியோசை போன்ற பாடல்கள். மாவீரர்நாள் அன்று இந்த பாடல்களின் இசை பின்புலத்திலே ஒலிக்க உறவுகள் துயிலுமில்லத்தில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி கண்ணீர் சிந்த அஞ்சலி செலுத்தினர்.
1987 ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த பாடல்தான் இந்த ஓ மரணித்த வீரனே என்ற பாடல். 1988, 1989 ம் ஆண்டு காலப்பகுயில் இந்தய இராணுவத்தின் ஆக்கிரமிப்பின்போது எமது போராளிகள் வீரச்சாவடைந்தால் அவர்களது வித்துடலை பெற்றோரிடமோ அல்லது அவர்களின் உறவுகளிடமோ ஒப்படைக்க முடியாது. அந்த நேரங்களில் எங்கேயோ கைக்கெட்டிய இடத்தில் விதைக்கும்போது சிறிய வானொலியில் இந்தப் பாடலினை ஒலிக்கச்செய்து அகவணக்கத்துடன் அந்த வித்துடலினை விதைப்போம்.

மாவீரர்நாள் பாட்டு வருவதற்கு முன்னர் இந்த பாடல்தான் போடப்பட்டது. அதற்கு இன்று நான் சாட்சியாக இன்னும் உயிருடன் இருக்கின்றேன். இன்றைய காலங்களில் ஒலிக்கின்ற மாவீரர்நாள் பாடலுக்கு இணையான பாடல்தான் இந்த பாடல். இந்த பாடலினை மேடையில் நீங்கள் பாடுகின்ற பொழுது உங்களை நான் யார் என்று தேடிபார்த்தபோது எனக்கு தெரிந்தவர்கள் இவர்தான் என கூறினார்கள். திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களே நீங்கள் தேசியம் மீது பற்றுடையவராக இருக்கலாம், எங்கள் மண்ணின் விடுதலைக்காக நீங்கள் தொடர்ந்தும் குரல் கொடுப்பவராக இருக்கலாம் அதில் எந்த மாற்றமும் இல்லை அந்தரீதியில் உங்களை நாங்கள் போற்றுகின்றோம், வணங்குகின்றோம். அதேநேரத்தில் 2009 ம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசாங்கம் இருக்கும் பொழுது அங்கீகரிக்கப்பட்ட பாட்டுக்களில் எந்த ஒரு பாட்டுக்கும் அதற்குரிய வார்த்தைகளோ, மெட்டுக்களோ, இசைகளோ மாற்ற முடியாது.


2009 ம் ஆண்டுக்கு பின்னர் பலபேர் பாடல்கள் எழுதுகின்றனர், பலபேர் மெட்டுகள் போடுகின்றனர் நாங்கள் அவற்றுக்கு உங்களிடம் எந்தவித கருத்துக்களோ கேட்கவோ சொல்லவோ வரமாட்டோம். அது அவர்களின் தனிப்பட்ட பாடல். ஆனால் இன்று நீங்கள் பாடிய இந்த பாடல் இது தமிழீழத்தின் சொத்து, மாவீரர்களின் சொத்து, மாவீரர் குடும்பங்களின் சொத்து, தமிழீழ பிரஜைகளின் சொத்து. இதனை எந்த ஒரு இசையமைப்பாளரும் நீங்கள் பாடல்வரிகளையோ, மெட்டுக்களையோ மாற்றி பாட முடியாது என்பதனை மிக வேதனையுடன் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.


அதேநேரம் இந்த பாடலினை மேடையில் பாடுவதற்கு மேடை கொடுத்தவர்கள் மேடையில் பாடுவதற்கு அங்கீகரித்தவர்கள் அவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். தரம் குறைந்த வேலைகளை செய்வதற்கு அங்கீகாரம் கொடுக்கின்ற அந்த இடத்தில் இருந்த பொறுப்பாளர்களையும் வன்மையாக கண்டிக்கின்றோம். இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். மாவீரர்களின் அந்த இசைகளை மாற்றுவதற்கான அங்கீகாரம் உங்களுக்கு யாரும் தரவில்லை. ஒரு விடயத்தினை தெரிவித்துக்கொள்ள வேண்டும். ஓயாத அலை -1 தாக்குதல் முல்லைத்தீவில் நடைபெற்றது அதற்குரிய இசைதட்டுக்குரிய இசையமைப்பு நடைபெறுகின்றது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களிலும், வீடுகளில், கிராமங்களில், புளியங்குளத்தில் வயல்வெளிகளில், அயலவர்களின் நாய், பூனை, கோழி போன்ற உயிரினங்களினது ஓசைகள் இடையூறின்றி கிராமத்தையே வெளியேற்றிவிட்டு அந்த இசைத் தட்டுக்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றது.

கொஞ்சகாலமாக அந்த பாடல் பாடி அந்த இசைத் தட்டினை வெளியிடுவதற்கான முன் ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர். அந்த நேரத்திலும் அங்கும் எறிகணைத் தாக்குதல் நடைபெற்றது. அதனால் இடம் மாற்றி வேறு இடத்தில் வைத்து அதற்குரிய ஏற்பாடுகளும் நடைபெற்றது. இதுதான் ஓயாத அலை -1 க்கான இருவட்டு. இப்படியாக போராட்டங்களுக்கு மத்தியிலும் அவர்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாடல்களை நீங்கள் எந்த ஒரு மேடையிலோ சரி அல்லது எந்த ஒரு இடத்திலோ சரி நீங்கள் அந்த புனித தன்மையினை கெடுப்பீர்களாக இருந்தால் உங்களை தமிழ் சமூகம், தமிழீழ மண், தமிழீழ மாவீரர்கள் அந்த மாவீரர்களின் பெற்றோர்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்பதனை கூறிக்கொண்டு.


நீங்கள் பார்க்கலாம் இன்றைக்கு ஒரு மாவீரர்நாள் நடைபெறுகிறது புலம்பெயர் நாட்டிலே என்றால் அதற்குரிய ஒத்திகை பார்த்து. எவ்வளவு அழகாக, எவ்வளவு அதன் தன்மை, யார் பாடுகின்றனர்?, இதற்குரிய இசையார்?. என்ன என்பதனையும் சகலவற்றையும் சரிபார்த்துதான் அந்த மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு மேடையில் ஏற விடுவார்கள் அந்த அளவிற்கு நுணுக்கமாகத்தான் செய்யப்படுவதுதான் இந்த மாவீரர்நாள் என்பதனை தயவுசெய்து நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மதிப்பிற்குரிய திரு. சந்தோஷ் நாராயணன் அவர்களே இப்படியான தவறுகளை இனிமேலும் விடாதீர்கள் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொண்டு. இதனை ஒழுங்கபடுத்தியவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். தெரியாத வேலைகளை செய்யாதீர்கள், இல்லை என்றால் தெரிந்தவர்களை கேட்டு செய்யுங்கள் இல்லையேல் அந்த இடத்தைவிட்டு ஒதுங்கிவிடுங்கள் என்று ஒழுங்குபடுத்தியவர்களுக்கு கருத்தை கூறிக்கொண்டும் வேதனையுடன் விடைபெறுகின்றேன்.

பிரான்சிலிருந்து நான் கஜன்.
நன்றி வணக்கம்.

00 33 75 80 87 08 4