ஒதியமலை படுகொலை நினைவு நாள் இன்று

159

ஒதியமலை படுகொலை நினைவு நாள் இன்று

ஒதியமலைப் படுகொலைகள் இலங்கையின் வடக்கு மாகாணம், முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒதியமலை என்ற கிராமத்தில் இலங்கைப் படைத்துறையினரால் மேற்கொள்ளப்பட்டன. 1984 டிசம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பதவிய இராணுவ முகாமில் இருந்து நெடுங்கேணிக்கு 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஒதியமலைக் கிராமத்திற்குள் புகுந்த கிட்டத்தட்ட 30 இராணுவத்தினர் அக்கிராமத்திலுள்ள வீடுகளில் இருந்த ஆண்களை மட்டும் தனியான ஓர் இடத்திற்கு கூட்டிச் சென்று சுட்டுப் படுகொலை செய்தனர். இவ்வாறு 27 ஆண்கள் கொல்லப்பட்டனர். மேலும் 5 ஆண்களைத் தம்முடன் கூட்டிச் சென்றனர். ஆனாலும், இவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை