ஐயப்ப சாமிக்கு விஷேட பாலாபிஷேகமும் விஷேட வழிபாடு நடைபெற்றது.

247

ஐயப்ப சாமிக்கு விஷேட பாலாபிஷேகமும் விஷேட வழிபாடு நடைபெற்றது.

10.12.2022 சனிக்கிழமை “வில் நெவ் சென் ஜோஸ்” பிரான்ஸ் என்னும் பதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள்ஆலயத்தில் கார்த்திகை மாத 23ம் நாள் ஐயப்பன் வழிபாட்டின் போது விஷேட பூஜையாக ஐயப்ப சாமிக்கு விஷேட பாலாபிஷேகமும் விஷேட வழிபாடு நடைபெற்றது.

அத்துடன் ஈழத்திரு நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட 18 படிக்கு விசேட அபிசேகம் அலங்காரம் என்பனவும்
அத்துடன் புதிதாக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கருப்புசாமி சிலைக்கு
கண்கள் திறக்கப்பட்டு விசேட அபிசேகம் அலங்காரம் செய்து 18 படி விசேட பூஜையும் பஜனை வழிபாடும் இடம்பெற்றது


அன்புடன் பொன் வரதராஜ குருக்கள்
ஆலய ஸ்தாபகர்