எங்கள் பிள்ளைகள் வீரச்சாவடைந்தது மட்டுமல்லாமல் விதைத்த இடத்தில் இன்றும் மிதிபட்டு, உதைபட்டு, கிடங்குக்குள் இருக்கின்றனர்.

129

எங்கள் பிள்ளைகள் போய் வீரச்சாவடைந்தது மட்டுமல்லாமல் அவர்களை விதைத்த இடத்தில் இன்றும் அவர்கள் மிதிபட்டு, உதைபட்டு, வதைபட்டுத்தான் கிடங்குக்குள் இருக்கின்றனர்.

அளம்பில் மாவீரர் துயிலுமில்லத்தை ஆக்கிரமிப்பு செய்துவைத்துக்கொண்டு உண்மைக்கு புறம்பான கதைகளை பேசிக்கொண்டு இருக்கும் பொழுது அதே அளம்பிலில் வாழும் இரண்டு மாவீரர்களைக் கொடுத்த உறவினரின் உள்ளக்குமிறல். இதற்கு பதில் கிடைக்குமா?.

வணக்கம்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் எங்களுடைய காணி அதனை அவர்களிடமிருந்து பெற்றுத்தாருங்கள். எங்களுடைய பிள்ளைகள் மட்டுமல்ல அதில் இருபத்தியொன்றோ, இருபத்திரண்டு பிள்ளைகளோ தெரியவில்லை அந்த கிணறு மற்றும் மலசலகூடம் அமைந்த பகுதியில் அடங்கியிருக்கின்ற வீரர்கள். அவ்வளவு இடத்தையும் எங்களுக்கு பெற்றுத்தந்து எங்களுக்குரிய மாவீரர் துயிலுமில்லத்தை ஒவ்வொரு வருடமும் அந்த மாவீரர் நாளுக்கான நேரத்தையும் எங்களுக்குத் தந்து அந்த இடத்தையும் பெற்றுத்தரவேணும்.

உண்மையிலேயே நாங்கள் இன்றைக்கும் அவர்களை நினைத்து கவளையில் அழுகின்றோம். அவர்கள் இப்போது உயிரோடு இருந்திருந்தால் நாலு பிள்ளைகளைப் போன்று எங்களையும் அந்த பிள்ளைகள் நன்றாக பார்த்திருப்பார்கள். அதற்காக எங்கள் பிள்ளைகள் போய் வீரச்சாவடைந்தது மட்டுமல்லாமல் அவர்களை விதைத்த இடத்தில் இன்றும் அவர்கள் மிதிபட்டு, உதைபட்டு, வதைபட்டுத்தான் கிடங்குக்குள் இருக்கின்றனர்.

எங்கள் துயிலுமில்லத்தில் ஒரு
பதினாறு பேர் அதில் விதைத்திருக்கின்றனர். அதில் என்னுடைய அக்காவின் இரண்டு மகன்களும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிள்ளைகளையும் விதைத்துள்ளனர். அவர்களை விதைத்த இடத்தில்தான் கிணறும், மலசலகூடமும் கட்டியிருக்கின்றனர். அந்த மாவீரர்களை உதாசீனப்படுத்தி அதற்கு மேலாக நடந்து திரிகின்றனர். ஆதலால் தம்பி பிரபாகரன் உங்களை கும்பிட்டுக் கேட்கிறேன். இந்த காணியை விட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நாளைக்கு எங்களுடைய பிள்ளைகள், உங்களுடைய பிள்ளைகள் எல்லாரும் ஒருநாள் இறப்பதுதான். யாரும் இருக்கவரவில்லை பிறப்பு என்றால் இறப்புத்தான். பிரபா அண்ணா நான் திரும்ப திரும்ப கேட்கிறேன் எங்களுடைய பிள்ளைகள் விதைத்த இடத்தை தயவுசெய்து விட்டுத்தாங்கோ. உங்களை கும்பிட்டுக் கேட்கிறேன். இந்த காணியை விட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.