பொங்கலுக்கு பிறகு போராளிகளும். வீரச்சாவடைந்ந குடும்பங்களுமா சேர்ந்து நாங்கள் சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போம்.

133

பொங்கலுக்கு பிறகு போராளிகளும். வீரச்சாவடைந்ந குடும்பங்களுமா சேர்ந்து
நாங்கள் சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போம்.

அனைவருக்கும் வணக்கம். மட்டக்களப்பு மாவட்டத்தில கல்லடி எனும் பிரதேசத்தில இருக்கிறம். நானும் எனது அக்காவும் வன்னி மாவட்டத்தில போராடுறத்துக்கென்டு வந்தனாங்கள். போராட்டத்தில எங்கடை அக்கா வீரச்சாவு அடைஞ்சிட்டா. முள்ளியவளையில லெப்டினன் ராங்கில கதிர்மகள் என்ட பெயரில விதைக்கப்பட்டிருக்கிறா.

நான் போராடிக்கொண்டே வந்தனான். அதன் பிற்பாடு எங்கள் குடும்பம் மாவீரர் குடும்பம் என்பதால அளம்பில் துயிலுமில்லம் பற்றி பிரபாண்ணா நான் கதைக்கலாம் என்று நினைக்கின்றேன்.

அளம்பில் துயிலுமில்லத்தில நீங்கள் பூட் சிற்றி (food city) அது உங்களுக்கு நியாயமாகப்படுதா?. துயிலுமில்ல முன் நுழைவாயிலை எடுத்து மூன்று 3 மாடி கட்டிடம் கட்டிவைச்சிருக்குறீங்க. ஆனால் அது சரியாப்படல சரியான பிழையாக இருக்கின்றது. நுழைவாயிலில கட்டிடம் கட்டி இரண்டாம் கட்டமா வித்துடல்கள் இருந்த இடத்தில மலசலகூடமும், கிணறும் கட்டியிருக்குறீங்க.

அதில தோன்டி எடுத்த வித்துடல்கள், எச்சங்கள் எங்க?. நீதிமன்றத்தில நீங்கள் அனுமதி எடுத்திட்டா இதை நீங்க செஞ்சீங்க?. அதுக்கொரு பதில் நீங்க சொல்லியே ஆகோணும். பூட் சிற்றிக்கு (food city) பின்னாடி ஐம்பது 50, அறுபது 60 வருசத்துக்கு முன்னாடி மூன்று 3 வேம்பு மரம் இருந்திச்சுது அந்த மரங்கள் எங்க?.

அந்த மரத்தோடு இருந்த வித்துடல்கள், எச்சங்கள் எங்க?. அதற்கு பிறகு எல்லா கட்டிடத்தையும் உடைச்சு ஒரு பாழடைஞ்ச கிணத்தில போட்டிருக்குறீங்க இப்பிடி செய்ய எந்த நீதிமன்றம் உங்களுக்கு உத்தரவு தந்த?. நீங்கள் செய்தது சரியான பிழை. தயவுசெய்து சொல்லுறன் நீங்கள் இதை அடியோட நிப்பாட்டோணும். அப்பிடி நிப்பாட்டேல்லை என்டு சொன்னா எல்லா சனங்களும் வந்து இதுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்த பூட் சிற்றியை (food city) தரைமட்டமா உடைக்கப் பாருங்க. உடைச்சுப்போட்டு நீங்க அதிலயிருந்து வெளியேறுங்க. நீங்க எவ்வளவு காணிக்கு காசு வாங்கினீங்களோ அந்த காணிக்குரிய காசு நாங்கள் தாறம். நீங்க என்ன செய்திருக்குறீங்கள் என்டு சொன்னா அளம்பில் பாழடைஞ்ச ஒரு கிணத்தில உடைச்ச எச்சங்கள் எல்லாத்தையும் எடுத்து (கல்லறை, கல், மண்) போட்டிருக்குறீங்க. நாங்கள் அதை நீதிமன்றம் மூலமாக அதை எடுப்பம்.

அதற்குரிய எச்சங்கள் நிறைய இருக்கின்றது. அப்பிடி நாங்கள் எடுத்தால் நீதிமன்றத்தால் தருகின்ற தண்டனையை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேணும்.
என் மாதிரி போராளிகள் வீரச்சாவடைந்த இடங்களெல்லா?.


அடுத்தாக நீங்கள் என்ன செய்ய வேணும்மென்டா. இதற்கு ஒரு முடிவு நீங்கள் எடுக்கேல்லை என்டு சொன்னா பதினைஞ்சாம் 15 திகதி பொங்கலுக்கு பிறகு போராளிகளும். வீரச்சாவடைந்ந குடும்பங்களுமா சேர்ந்து
நாங்கள் சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்போம்.

நாங்கள் செத்தாலும் பரவாயில்லை. மாவீரருக்காவேண்டித்தானே போராடப்போறம். துயிலுமில்லத்தை முற்றுமுழுதாக மறைச்சு என்ன செய்திருக்குறீங்க என்டு சொன்னா மூன்று 3 மாடி கட்டிடம் கட்டி வைச்சுருக்குறீங்க.

நாங்கள் ஒன்றறை மாசமாக நடந்து சாப்பாடு தண்ணி இல்லாமல் கடல் கடந்த அதால போன்னாங்கள். எத்தனையோ அடி நடந்திருக்கு, எத்தனையோ சண்டை நடந்திருக்கு அத்தனைக்கும் மத்தியில விடுபட்டு நாட்டுக்காக போராடப் போனாங்கள்.