துயர் பகிர்வு.சகோதரி அன்ரனென்ற் போா்ஜே

110

துயர் பகிர்வு.சகோதரி அன்ரனென்ற் போா்ஜே

துயர் பகிர்வு
ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 8, 2023 மாலை 17h00 மணியளவில் சங்கைக்குரிய சகோதரி அன்ரனென்ற் போா்ஜே (Soeur Antoinette FORGET) அவா்கள் லில் (Lille) எனும் இடத்திலுள்ள நோத்திரு டம் (Notre Dame) எனும் முதியவா் இல்லத்தில் இருந்து மரணத்தை தழுவினாா் என்பதை ஆழ்ந்த கவலையுடனும், மிகுந்த வருத்தத்துடனும் தெரிவித்து நிற்கின்றோம். இவா் இலங்கையில் 30 ஆண்டுகள் வாழ்ந்தார். 1980களின் தொடக்கத்தில் இருந்து இலங்கையிலிருந்து, பிரான்சுக்குத் திரும்பிய அவர், தமிழ் அகதிகளுக்கு நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியாகவும் பெரும் உதவியாக இருந்தார்.

அவா் தமிழ் மக்கள் மேல் வைத்த அன்பினாலும், அளப்பரிய நேசத்தினாலும், மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை மதியம் 12h30 மணிக்கு தமிழ் மக்களுக்கென தமிழில் திருப்பலி சென் யோசவ் தேவாலயத்தில்( Eglise Saint Joseph des Nations, Gongourt) அவரது உதவியால் திருப்பலி ஒழுங்கமைக்கப்பட்டு இன்று வரை தொடா்ந்து கொண்டே இருக்கின்றது. அத்துடன் தமிழில் “சங்கரம்” என்ற இதழை வெளியிடவும் அனுமதித்தது.

1980 ம் ஆண்டு முதல், முழு தமிழ் சமூகத்தையும் ஒன்றிணைத்து கலாச்சார ரீதியாக கிறிஸ்துமஸ் விழாவை ஏற்பாடு செய்து கொண்டாட இவா் அனுமதித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

1985 ஆம் ஆண்டில், இவா் தமிழ் மக்களுக்கு ஆன்மீக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் உதவுவதன் மூலம் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் முதல் தமிழ் பாடகர் குழு, மற்றும் இலங்கை தமிழ்ப் பெண்களுக்கான அமைப்பை ௨ருவாக்கி இருந்தாா். இவ்வமைப்பு மூலம் அவா் தமிழ் மக்களுக்காற்றிய சேவைகள் எண்ணிலடங்கா. இவா் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து, கல்வி மற்றும் குழந்தைகளுக்கான தமிழ் கலாச்சாரம், கற்றல் ஆகியவற்றை வளர்த்து, அத்துடன் பெண்கள் அமைப்பிற்கு ஊக்கத்தை கொடுத்து கண் என்ற காலாண்டு இதழான பத்திாிகையை ௨ருவாக்கி, தமிழ்ப்பெண்களின் எழுத்தாா்வத்தை வளா்த்தெடுத்தவா் என்ற பெருமை அவரையே சாரும்..

அவரது ௨தவியினால், சமூகத்தில் விடுமுறைக்கு செல்லமுடியாத அனேக குழந்தைகள் , கோடைக்கால விடுமுறைக்குக்கு செல்லக்கூடியதாக இருந்தாா்கள்.

ஏப்ரல் 11, 1992 இல், பிஷப் ஈவ் டி மால்மேன்(MGR Yves de Malman) தலைமையில், சகோதரி அன்டோனெட்டின் ஏற்பாட்டின் உதவியுடன், அனைத்து தமிழ் அமைப்புகளுடனும் ஒரு சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தி “இலங்கை கத்தோலிக்க தமிழர்கள் மன்றம்” ஒன்றை உருவாக்குவதற்கு வழிவகுத்த பெருமை அவரையே சாரும். இந்த சந்திப்பின் மூலமே பிரான்சில் வாழும் கத்தோலிக்கா்களுக்கென ஆன்மீக தேவைகளை பூா்த்தி செய்வதற்கென தமிழில் ஆன்மீக அருட்டபணியாளா் தேவையென்பதை வலியுறுத்தி தமிழ் ஆன்மீக பணியாளா்களை பிரான்ஸ் நாட்டிற்கு வரவழைத்த பெருமை அவருக்கே ௨ரித்தானது. தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தை ௨ருவாக்குவதில் சகோதரி அன்ரனெற் அவா்கள் ஒரு மூலைக்கல்லாக முழுமூச்சுடன் செயற்பட்டதனால் தான் இன்று வரை தமிழ் கத்தோலிக்கா்களுக்கு தமிழ் ஆன்மீக அருட்பணியாளா்களின் வருகையும் சேவையும் தொடா்கின்றன.

மற்றும் வதிவிடபத்திரம் இல்லாதவா்களுக்கு, வதிவிடப்பத்திரம் பெற்றுக்கொடுப்பதிலும், மற்றும் இல்லிடம் இல்லாதவா்கள், வேலையற்றோா் என எமது தமிழ்சமூகத்திற்கு சகோதாி அன்ரனெற் அவா்களினால் ௨தவிகளைப் பெற்றவா்கள் எத்தனையோ போ் இங்கேயுள்ளனா்

சகோதரி அன்ரனெற் , ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் நீங்கள் எங்களுக்கு செய்த உதவிகளுக்காக சிரம் தாழ்த்தி நன்றி கூறி ௨ங்களின் அழகிய ஆன்மாவின் நித்திய ஓய்விற்காக நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

நீங்கள் எங்களுக்கு செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி.

ஆண்டவா் ௨ங்களுக்கு மோட்சத்தின் கதவுகளைத் அகலத் திறந்து வைத்திருப்பாா். நீங்கள் அதற்கு முற்றும் தகுதியானவா்.,

உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். நன்றிகள் கலந்த கண்ணீரோடு ௨ங்களை வழியனுப்பி வைக்கின்றோம்.போய் வாருங்கள்