பிரான்சில் காணாமல் போயுள்ள இன்னும் ஓர் இளைஞன். வவுனியா செட்டிகுளத்தினை சேர்ந்த சக்திவேல் பிரவின் (சந்துரு).

320

பிரான்சில் காணாமல் போயுள்ள இன்னும் ஓர் இளைஞன். வவுனியா செட்டிகுளத்தினை சேர்ந்த சக்திவேல் பிரவின் (சந்துரு).

இன்னுமொரு இளைஞரை பிரான்சில் காணவில்லை.
காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்ற இளைஞனை தேடித்தருமாறு இன்னுமொரு தாயார் (சக்திவேல் விமலாதேவி)கண்ணீர் மல்க தேடுகின்றார்.

வவுனியா செட்டிகுளத்தினை சேர்ந்த சந்துரு என்று அழைக்கப்படுகின்ற சக்திவேல் பிரவின். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் அகதி அந்தஸ்து கோரியிருந்தார்.

இவர் முலான் (Melun) எனும் இடத்தில் அமைந்துள்ள Foyer என்று அழைக்கப்படுகின்ற காப்பகத்தின் முகவரியை பதிவுசெய்துவிட்டு செவ்ரோன் (Sevran)என்ற பகுதியில் தனது நண்பர்களுடன் வசித்து வந்துள்ளார். இதன் போது இவருக்கு கிடைக்கின்ற சிறு வேலைகளையும் செய்துவந்துள்ளார். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு 8ஆம் மாதம் 7ஆம் திகதி அன்று இறுதியாக தனது தாயுடன் காணொளி அழைப்பினூடாக தொலைபேசியில் உரையாடினார்.

அடுத்தநாள் இவர் தனது இன்னுமொரு நண்பனின் வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் இவருடைய தொலைபேசியில் மின்கலம் (Battery) இல்லாமல் நின்றுவிட்டது. அந்த நண்பனின் வீட்டில் தொலைபேசிக்கு charge செய்துவிட்டு முடிதிருத்தும் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவில்லை. இவர் எங்கே சென்றார்?. என்ன செய்கிறார்?. எங்கே இருக்கிறார்?. என்பது பற்றி இன்னும் அறியமுடியவில்லை. எனவே சந்துரு என்று அழைக்கப்படுகின்ற சக்திவேல் பிரவின் என்பவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கீழ்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

(0033)758087084
லோகநாதன் மருதையா (கஜன்)
அனைத்துலக மனித உரிமைகள் சங்கம் பிரான்சு.

(0094)718849648 விமலாதேவி (தாயார்).