தமிழ் நாட்டு பேராசிரியர் குழு மற்றும் இயற்கை விவசாயிகள் இலங்கை வன்னிக்கு சென்ற ஆற்றுப்படுத்துகை நிகழ்வு .

201
தமிழ் நாட்டு பேராசிரியர் குழு மற்றும் இயற்கை விவசாயிகள் இலங்கை வன்னிக்கு சென்ற  ஆற்றுப்படுத்துகை நிகழ்வு

பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையிலான 5 பேர் கொண்ட பேராசிரியர்கள் குழு கடந்த 3 வாரங்கள் இலங்கையின் போரால் அழிவுற்ற வன்னி , முல்லைத்தீவு , கிளிநொச்சி , மன்னார்  மட்டகளப்பு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியான  புதிய வெளிச்சம் ஊடாக ஆற்றுப்படுத்துகை , கல்வி , முன்னேற்பாடுகளுக்கான பயிற்சிகளை வழங்கியிருந்தார்கள் , இதில் போரால் பாதிக்கப்பட்ட  கலந்துகொண்டு பயனை அடைந்தார்கள்  . பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்தவருடமும் ஒரு மாத கால பயிற்சிகளை பாடசாலைகள் , பொது இடங்களில் வழங்கியிருந்தார் .

இலங்கைக்கு வந்த அடுத்த விவேகானந்தர் என்று மக்கள் பெரிதும் இதனை கொண்டதாடினார்கள் . சுமார் 10000 க்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்றார்கள்

இலங்கையின் வடக்கு முதல்வர் திரு சி வி விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்பு கௌரவத்தை வழங்கியிருந்தார் .மேலும் யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜன் மற்றும் வடக்கு கல்வி அமைசச்ர் 
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கௌரவ சிவநேசன் அவர்களும் நேரில் சென்று தமது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்கள் 

புதிய வெளிச்சம் கொண்டுவந்த இயற்கை விவசாயம் வாரம் 

தமிழகத்தைச்சேர்ந்த சிறந்த உளநலம் சார்ந்த பேச்சாளரான பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த வருடம் இலங்கைக்குவருகை தந்து, இலங்கை முழுவதும் தமிழர் வாழும் பிரதேசங்களில் சுமார் 18 நிலையங்களில் போரால் பாதிக்கப்படட மக்கள் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் ஆகியோரை ஆற்றுப்படுத்தும் வகையிலான உரைகளை ஆற்றி அவர்களின் உளநல மேம்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்குஆற்றியிருந்தார்.

அந்த வகையில் இரண்டாவது செயற்பாடாக இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் 17 ம் திகதி வரை  புதிய வெளிச்சம் என்ற கருப்பொருளில் ஒழுங்குசெய்யப்பட்ட பயிற்சிப்பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும்வவுனியா மாவட்டங்களில் நடைபெற்றிருந்தன.இந்த பயிற்சிப்பட்டறைகளை மிகப்பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது.

மொத்தம் முப்பத்தியொரு முழுநாள் பயிற்சிப் பட்டறைகள், இரண்டு பாதி நாள் பட்டறைகள், ஆறு கலந்துரையாடல்கள், மூன்று நிகழ்வுகள், “அடுத்ததுஎன்ன?” என்ற  தலைப்பில் இரண்டு கலந்துரையாடல்கள், உள்ளூர் ஆர்வலர்கள், அறிஞர்கள் உடனான சந்திப்புக்கள், ஆசிரியர்கள், அதிபர்கள்,கல்வியியலாளர்கள், இளைஞர் யுவதிகள், விவசாயிகள், சமூக தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பங்களிப்புடன் புதியவெளிச்சம் 2018 தனது சேவையை வழங்கியிருந்தது .

ஜனவரி 1ஆம் திகதி முதல் கடந்த இருவாரா காலமாக யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை சேர்ந்தபயனாளிகளுக்கு மூன்று பிரிவுகளில் இலவச பயிற்சிப் பயிற்சிப்பட்டறைகள், புதிய வெளிச்சம் என்ற கருப்பொருளில் ஒழுங்குசெய்யப்பட்டு சிறப்புற நடைபெற்றிருந்தன.. இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையிலான வளவாளர்களுடன் சுவீடன் மற்றும் கனடாவில் இருந்தும் வளவாளர்கள் வருகை தந்திருந்தார்கள். இவர்களுடன் யாழ்ப்பாணத்ததை சேர்ந்த துறைசார்வல்லுனர்களையும் இணைத்தே இந்த பயிற்சிப்பட்டறைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் ஒழுங்கு செய்யப்பட்ட புதியவெளிச்சம் என்ற கருப்பொருளிலான இந்த பயிற்சிப்பட்டறைகள், சரியான வழியில்,பயன்பெற வேண்டியவர்களை சென்றடைவதில் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், வடமாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களங்கள்,பாடசாலைகள், வடமாகாண விவசாய அமைச்சு, விவசாய திணைக்களம், விவசாய கல்லூரிகள், யாழ்ப்பல்கலைக்கழக விவசாய பீடம் என்பவற்றின்ஒத்துழைப்பு பெறப்பட்டிருந்தது.

கல்வியியல் சார் பயிற்சிப்பட்டறைகளை நடத்தவென தமிழகத்தியிலிருந்து வருகைதந்திருந்த வளவாளர் குழு,

 1. கலாநிதி பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ  பாலகிருஷ்ணன் அவர்கள் ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் கலாநிதிப் பட்டம் பெற்றவர், கல்வியாளர்,சிறந்த பேச்சாளர், தனது சொல் வான்மையால் இளைஞர்கள் மத்தியில் உன்னத பெயர் கொண்டவர், வாழ்வியல் தத்துவங்கள் மற்றும் நமது கலாச்சாரம்,பண்பாடு, கல்வி மேம்பாடு குறித்த கருத்துக்களை வழங்கி வருபவர்.
 2. கலாநிதி பேராசிரியர் A. பாலகிருஷ்ணன், இவர் ஆங்கிலத்துறை பேராசிரியர், நாற்பது ஆண்டு காலம் தலைமை ஆசிரியராக இருந்தவர்.
 3. கலாநிதி பேராசிரியர் E. பெனட், இவர் மிகவும் எளிய முறையில் ஆங்கிலம் பேச மற்றும் எழுத வழிமுறைகளை கற்பிக்கக்கூடியவர், ஆசிரியர்துறையில் நீண்ட கால அனுபவம்  ஆங்கிலத்துறை பேராசிரியர்.
 4. பேராசிரியர் ஷாரன் பெனட், இவர் மனோதத்துவத்துறைப் பேராசிரியர், மாணவர்களிடையே உள்ள அச்சம், ஞாபகசக்திக் குறைபாடு என்பவற்றைப்போக்கி அவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்க வல்லவர்.
 5. பேராசிரியர் தாரணி ஆங்கில இலக்கியத்தில் கலாநிதி பட்டம் பெற்று அரசு கலைக் கல்லூரி, அவினாசி, தமிழ் நாட்டில் ஆங்கிலத்துறைத் தலைவராகபணிபுரிந்து வருகிறார்.
 6. யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த, தற்போது சுவீடனில் வாழ்ந்துவரும், சுவீடன் பல்கலைக்கழகத்தில் இயற்கை விவசாயத்தில் பல ஆய்வுகளைமேற்கொண்டிருந்த, வெவ்வேறு பல்கலைக் கழகங்களில் பணிபுரிந்திருந்த பேராசிரியர் நடராஜ ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் இயற்கை விவசாய பயிற்சிப்பட்டறைகளுக்கு தலைமைதாங்கி நடத்தியிருந்தார். இதன் மூலம் ஜனவரி 8ஆம் திகதி முதல் ஜனவரி 14ஆம் திகதி வரையான ஒருவார காலத்தை “இயற்கை விவசாய விழிப்புணர்வு வாரம்” ஆக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு முழுவதும் தொடர் பயிற்சிப்பட்டறைகளும் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளும் நடைபெற்றிருந்தன.
 7. விவசாய பயிற்சி பயிற்சிப்பட்டறைகளை நடத்தவென திரு பாமயன் தலைமயிலான தமிழகத்தியிலிருந்து வருகைதந்திருந்த அனுபவம் வாய்ந்த விவசாயிகள் குழு,

   

  1. திரு பாமயன்,இருபது ஆண்டு கால இயற்கை விவசாய அனுபவம், இயற்கை விவசாயம் சார்ந்த இருபத்தைந்து நூல்களை எழுதியுள்ளார். இயற்கைவிவசாய பயிற்றுனராக உள்ளார்.
  2. திரு சுந்தரராமன், இருபத்தைந்துஆண்டு கால இயற்கை விவசாய அனுபவம், இயற்கை விவசாய பயிற்றுனராக உள்ளார். தமிழகத்தில் முதலாவதுஇயறக்கை விவசாய பண்ணையை அமைத்தவர்.
  3. திருரவி, இருபத்தைந்து ஆண்டு கால இயற்கை விவசாய அனுபவம், மண்புழு வளர்ப்பில் வல்லுநர். பயிற்றுனராக உள்ளார். மிகப்பெரிய அளவில் மண்புழு உற்பத்தியில் ஈடுபடுபவர்.
  4. திரு சதுரகிரி,பத்து ஆண்டு கால இயற்கை விவசாய அனுபவம். இயற்கை விவசாய

   பயிற்றுனராக உள்ளார்.
  5. திரு கஜேந்திரமூர்த்தி, இயற்கை விவசாயத்தில் ஈடுபாடுள்ளவர், பெரிய அளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்.

 8. இவர்களுடன் கலாநிதி ஸ்ரீதேவி ஸ்ரீஸ்கந்தராஜா, இவர் விவசாயத் தொழிநுட்பத்துறையிழும் பூங்கனியியலிலும் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர், ஆகியோரும் இயற்கை விவசாய பயிற்சிப்பட்டறைகள் மற்றும் இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிப்பட்டறைகளில் கருத்துரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார்கள்.
 9. ஒரு வார ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில்,நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்குகொண்டு பயனடைந்திருந்தார்கள்.

 10. வடமராச்சி வலய கல்விப்பணிமனையிலும் கிளிநொச்சிக் கல்விப்பணிமனையிலும் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் பாடசாலை அதிபர்களுக்கான கருத்துரை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது, இருநூறுக்கும் அதிகமான அதிபர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தார்கள்..
 11. ஒருவார கால பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும்முல்லைத்தீவு மாவட்டங்களில்,  நடைபெற்ற பயிற்சிப் பட்டறைகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குகொண்டு பயனடைந்திருந்தார்கள்.
 12. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல், ஒரு நாள் பயிற்சிப் பட்டறைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் ஜனவரி
SHARE