எங்களது பூர்வீகக் கிராமங்களில் சிங்களவர்களைக் குடியேற்றுவதனைத் தடுத்து நிறுத்தவேண்டும்

917
மகாவலித்திட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற இருக்கின்ற சிங்களக் குடியேற்றத்தினை உடனடியாக நிறுத்தித்தவேண்டும். பூர்விகக் குடிகளான நாம் குடியேறியும் எங்களுக்கான வசதிகள் எதுவும் செய்து தராத நிலையில் சிங்களவர்களைக் குடியேற்றவுள்ளனர் இதனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பிரதேசவாசியான சிவமணி  கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தொடுவாய் மணலாறு உட்பட தமிழர்பிரதேசங்களில் 4500 சிக்களக்குடும்பங்கள் குடியேற்றப்பட இருப்பதுதொடர்பாக மேற்கண்டவாறுதெரிவித்தார்.
அவர் மேலும்தெரிவிக்கையில் நாம் 1984 மார்கழி மாதம் 24 ஆம் திகதி கொக்குத்தொடுவாய்க் கிராமத்தில் இருந்து இராணுவத்தால் நச்சுக்குண்டு பயன்படுத்த இருப்பதாகத் தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் வெளியேற்றப்பட்டு இன்று குடியேறியுள்ள நிலையில் எமக்கு எவ்வித வசதிகளும் செய்யப்படாமல் எமது சொந்த நிலத்தில் சிங்களவர்களைக் குடியமர்த்துவது என்ன அநியாயமாக இருக்கின்றது.
இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில்  எமது சொந்தக்கிராமங்களில் சிங்களவர்களை குடியேற்றுவதனை உடனடியாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தடுத்துநிறுத்தி எமது சொந்த நிலத்தை விட்டு 30 வருடமாக அகதிவாழ்க்கையில் வாழ்ந்து தற்போது குடியேறியுள்ள எங்களது வசதிவாய்ப்புக்களைச் செய்துதருவதுடன் எமது சொந்த இடங்களில் சிங்களவர்கள் குடியேற்றுவதனை தடுத்து நிறுத்த  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கைகளைச் செய்யவேண்டும் என்றார்.

SHARE