தமிழின அழிப்பு மகிந்த ராஜபக்ச 5ம் பக்கம்

467

மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.

மகிந்த ராஜபக்ச ……   பக்கம் 5

மகிந்த ராஜபக்ச 19.11.2005 -முதல்  09.01.2015 காலப்பகுதி
Mahinda Rajabaksa   President
இவர் பௌத்த மத வெறி பிடித்தவர் தமிழினத்தை அழித்து இலங்கையை சிங்கள தீவாக மாற்றுவதில் மும்மரமா செயல்பட்டவர்.
 ஜே ஆர் ஜெயவர்த்தனா எப்படி தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தாரோ அதிலும் பலமடங்காக இந்த மகிந்த ராஜபக்ச படுகொலைகள் புரிந்தார்.
இவரின் காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு எத்தனையோ அப்பாவி பொதுமக்கள்  படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டனர்.
மேலும் தமிழ் அரசியல் தலைவர்களை திட்டமிட்டு படுகொலைகள் செய்தவர். மற்றும் பாடசாலை மாணவிகள் ,ஆசிரியர்கள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த காலத்தில் அத்துமீறி போரைத் தொடுத்தவர். அத்தோடு தமிழர் தாயகங்களுக்கு பொருளாதார தடையை கொண்டுவந்து மருந்துக்கள்,உணவுப்பொருட்கள் என்பனவற்றை முற்றுமுழுதாத தடைசெய்து தமிழ் மக்களை பட்டினியாலும் நோயாலும்  பாதிப்புக்குள்ளாகி இனப்படுகொலை புரிந்தவர். அதுமட்டுமல்லாது குழந்தைகள் அருந்தும் பால்மாக்களையும் தடைசெய்து பச்சிளம் பிள்ளைகள் பசியினால் துடிதுடித்து  இறக்கவும் காரணமாக இருந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
மேலும் ஸ்ரீலங்கா இராணுவத்திட்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக போர் நடக்குமிடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சென்சிலுவை சங்கம் போன்ற நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளரர்கள் அனைவரையும் வெளியேற்றி எந்தவொரு செய்திகளும் வெளிசெல்லாத படி செய்துவிட்டு கொத்துக்குண்டு எரிகுண்டு இவையாவும் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டன .குறிப்பாக கொத்துகொண்டு எரிகுண்டு இரசாயன குண்டுகள் இவையாவும் சர்வதேச ரீதியால் தடை செய்யப்பட்டதொன்று இவ்வாறான குண்டுகளை பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்களை கொன்று குவித்தனர்.
மேலும்  பொது மக்கள் அகதியாக உயிர் தப்பிக்கொள்வதற்காக ஓடும் பொது அவர்களை பாதுகாப்பு வலயம் என கூறி   பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தங்க வைத்து .திட்டமிட்டு   எறிகணை வீச்சுகளும் விமான குண்டுவீச்சுகளையும் அவ்விடங்களில்  நிகழ்த்தி  அந்த மக்களை படுகொலை செய்தவர் . இந்த தாக்குதல்களில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கில்  படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு பலர் கண்கள் இழந்து  கால் கைகள் இழந்து ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் . இன்றுவரை அவர்கள் யாவரும் ஊனமாகவே வாழ்கின்றார்கள்.
தமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திட்டமிட்டு இவரால் அழிக்கப்பட்டதுடன் இவரால் சூறையாடவும் பட்டது.
2009 இறுதிப்போர் நடக்கும்போது பொதுமன்னிப்பு தரலாம் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையும்படி கூறிவிட்டு சரணடைந்தவர்களை  கையையும் கண்ணையும் கட்டி அந்த இடத்திலேயே ஆண் பெண் பாகுபாடின்றி ஆடை களையப்பட்டு வன்கொடுமைக்குட்படுத்தி படு கொலைசெய்தார் . அத்தோடு பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாரோடு சரணடைந்த  போராளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதாவது பெண்கள் குழந்தைகள் உட்பட பெற்றோரால் கையளிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கானவர்கள் இன்றுவரையும் காண்பிக்கப்படவும் இல்லை விடுதலை செய்யவும் இல்லை.
1,46,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் கொன்று குவித்தவர் இவர். உலகத்திலேயே அதிக கொடுமைகளை புரிந்து படுகொலை செய்தவர்  என வர்ணிக்கப்படும் ஹிட்லர்.
 ஆனால் அவரை விட 21ம் நூற்றாண்டில் அதிகமான இன படுகொலைகளை புரிந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
 தமிழினத்தை அழித்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இன்றுவரையும் துடித்து கொண்டிருக்கிறார் .
***இவர்காலத்தில் நிகழ்ந்த படுகொலைகள்***
புதுமாத்தளன் படுகொலை 01.04.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த புதுமாத்தளன் பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டதுடன் .
02.04.2009 அன்றும் 31 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும்  03.04.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த புதுமாத்தளன் பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இராணுவ தாகுதலில் 03 நாட்களில் 90 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை படுகொலை 04.04.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனைமீது  சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
05.4.2009 அன்று வான் படையினரின் உலங்கு தாக்குதலில் அம்மலவன்பொக்கணை இடைக்காடு மாத்தளன் மக்கள் 92 பேர் படுகொலை 153 பேர் படுகாயம்
பொக்கனை படுகொலை 08.04.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த பொக்கனை பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டனர்.
வன்னி பகுதிகளில் தாக்குதல் 09.04.2009 அன்று   பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த வன்னி பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல 10.09.2009 அன்று நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
புல்மோட்டை படுகொலை 11.04.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த புல்மோட்டை பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
வன்னி பகுதிகளில் தாக்குதல் 12.04.2009 அன்று   பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த வன்னி பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல 13.04.2009 அன்று நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர். பலர் பலத்த காயங்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.
முல்லைத்தீவு படுகொலை 16.04.2009 அன்று   பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த முல்லைத்தீவு  பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை 17,18.04.2009 தினங்களில் பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால்  பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால்,இரட்டைவாய்க்கால்,வலையர்மடம்,அம்பலவன்,பொக்கணை போன்ற பாதுகாப்பு வலய பகுதிகளுக்குள் இலங்கை இராணுவம் 19.04.2009 அன்று நிகழ்த்திய தாக்குதலில் 310 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 542 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
வன்னிப்பிரதேசங்களான மாத்தளன் பொக்கணை பகுதிகளில் இலங்கை இராணுவத்திடம் தஞ்சம் புகுந்த மக்களை 20.04.2009 அன்று கொடூர இன கொலைத்தாக்கில் 476 சிறுவர்கள் உட்பட 1496 அப்பாவி மக்களை படுகொலை செய்தனர்.
வலைஞர்மடம் படுகொலை 21.04.2009 அன்று   பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த வலைஞர்மடம்  பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனை மீது  சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 07 பேர் கொல்லப்பட்டதுடன் ஒட்டுமொத்தமாக 473 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் 722 பேர் படுகாயம் அடைந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில் 23.04.2009 மகிந்த அரசின் இராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 287 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 300 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வலைஞர்மடம் படுகொலை 23.04.2009 அன்று   பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த வலைஞர்மடம்  பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடம் மீது  சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இலங்கை இராணுவத்தால் 25.04.2009 அம்பலவன் பொக்கணை ,வலைஞர்மடம்  மக்களின் வாழ்விடங்கள் மீது வீசிய ஆட்லறி எறிகணை ,கொத்துக்குண்டு எறிகணை பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 324 படுகொலை செய்யப்பட்டனர். 423 பேர் படுகாயம் அடைந்து ஊனமாக்கப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை 26.04.2009 தினங்களில் பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால்  பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை26,27,28.04.2009 ஆகிய தினங்களில் பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால்  பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதலில் 200 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதேபோல 29.04.2009 இல் சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில 79        கொல்லப்பட்டனர்.
02.05.2009 அன்று வைத்தியசாலையில்   சிங்கள கடற்படை நடாத்திய தாக்குதலில் 64 பேரும் கொல்லப்பட்டனர்.பலர் காயப்பட்டு ஊனமமாக்கப்பட்டதுடன் லட்சக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை இராணுவத்தால் நிகழ்த்திய தாக்குதலில் காயமுற்ற பொதுமக்கள் வவுனியா வைத்தியசாலை கொண்டு சென்று சிகிச்சை பலனளிக்காமல் 02.05.2009 அன்று 78 மக்கள் உயிரிழந்தனர்.
மட்டக்களப்பு பாவற்கொடியை சேர்ந்த ஆசிரியர் ரவீந்திரராசா அவர்களை 06.05.2009 அன்று இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினர் சுட்டுக்கொண்டனர்.
வன்னிப்பகுதி தாக்குதலில் அப்பாவி மக்கள்  162 பேர் மே மாதம் 2009ம் ஆண்டு 6 மற்றும் 7ம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் 08.05.2009 அன்று  கடற்படையினர் மற்றும் இராணுவத்தின் தாக்குதலில் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் 289 பேர் படுகாயமடைந்தனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை 09.05.2009 அன்று பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால்  பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலை10,11.05.2009 தினங்களில் பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால்  பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில்3200 பேர் கொல்லப்பட்டனர்.
முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் நிகழ்த்திய உச்சக்கட்ட தாக்குதலில் 10.05.2009 அன்று 1,112 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
தர்மகுலசிங்கம் படுகொலை 12.05.2009 அன்று தர்மகுலசிங்கம் தற்காலிக மருத்துவமனை மீது சிங்களை இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர்.
மருத்துவமனை பலத்த சேதத்துக்கு உள்ளாகியது.முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் 12.05.2009 இலங்கை இராணுவத்தினரால் நடாத்திய குண்டுத் தாக்குதலில் 227 பேர் படுகொலை 500ற்கும் மேட்பட்டோர் படுகாயம்
 மொத்தமாக முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று மட்டும் 2400 பேர் படுகொலை செய்யப்பட்டனர் .
முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை படுகொலை
13.05.2009 தினங்களில் பாதுகாப்பு வலயம் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால்  பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவமனைமீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர். இதில் மருத்துவர்கள் உட்பட பல நோயாளிகளும் ஊனமுற்றோரும்  அடங்குவர்.
வன்னி பகுதியில் இலங்கை இராணுவத்தால் மே மாதம் 2009ம் ஆண்டு 13 மற்றும் 14 ம் திகதிகளில் நிகழ்த்திய ஆட்லறி மற்றும் மோட்டார் எறிகணை தாக்குதலில் 3700 படுகொலை செய்யப்பட்டதுடன்
3000 ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
விடுதலை புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தற்கும் இடையிலான இறுதி போரின் போது (15.05.2009 – 18.05.2009 ) இலங்கை இராணுவத்தின் ஆட்லரி தாக்குதல், கடற்படையினரின் எறிகணைத்தாக்குதல், விமானதாக்குதல்,, எரிகுண்டு தாக்குதல், கொத்துக்குண்டு வீச்சு ( சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட குண்டுகள்) இராணுவ டாங்கி தாக்குதல் போன்ற பலவேறுபட்ட கொடூர தாக்குதலில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 2 சதுர கிலோமீட்டர்  பிரதேசத்தில் ஒதுங்கியிருந்த 1 லட்சத்துக்கும் மேட்பட்ட மக்களில் 25,000 பேர் தாக்குதல் நடந்த கணங்களில் படுகொலை செய்யப்பட்டதும் . காயப்பட்ட 25,000 மக்கள் சிகிச்சையின்றியும் மேலும் இராணுவத்தினரின் டாங்கி வாகனங்கள் பதுங்கு குழிகளிலிருந்த மக்களை மூடியதுமாக அவர்கள் பலியானார்கள்  .
அத்தோடு இறுதியுத்தத்தில் உயிருடன் எஞ்சியிருந்த போராளிகளுக்கு பொது மன்னிப்பு தரலாம் என அரசாங்கம் கூறி அவர்களை ஆயுதங்களை வைத்துவிட்டு  சரணடையுமாறு கூறி  வெள்ளைக்கொடிகளுடன் சரணடைந்த போராளிகளில் சிலரை உடனே படுகொலை செய்தனர் எஞ்சிய சில போராளிகளின்  கைகள் மற்றும் கண்களை கட்டி ஆடைகள் களையப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கியும் பெண் போராளிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியும் படுகொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
2009 இறுதி போரில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 46 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அரச சார்பற்ற நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் தெரிவிக்கின்றன.
அத்தோடு பொது மன்னிப்பு தரலாம் என்ற அறிவித்தலின் படி பாதர் பிரான்சிஸ் ஜோசெப் இன் தலைமையில்  சரணடைந்த நூற்றுக்கணக்கான போராளிகள் மற்றும் போராளிகளின் குடும்பங்கள்  அதாவது  பெண்கள்  சிறுவர்கள் வயோதிபர்கள் என நூற்றுக்கணக்கானோர்  இதுவரையும் விடுதலை செய்யவும் இல்லை அவர்களை காண்பிக்கப்படவும்  இல்லை. இன்றுவரையும் அவர்களை கையளித்த பெற்றோர்கள் தேடி அலைகிறார்கள்.
இந்த படுகொலைகள் யாவிட்கும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறியவரும் இனப்படு கொலையாளருமான  இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே  காரணமாவார்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு
00 33 1 45 98 89 49 0033 75 80 870 84
Email aidhfrance@gmail.com
SHARE