தமிழின அழிப்பு ஆதாரங்கள். மகிந்த ராஜபக்ச 3ம் பக்கம்

682

மறைக்கப்பட்டு வரும் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஆதாரங்கள்.

மகிந்த ராஜபக்ச . 3ம் பக்கம்

மகிந்த ராஜபக்ச 19.11.2005 -முதல்  09.01.2015 காலப்பகுதி
Mahinda Rajabaksa   President
இவர் பௌத்த மத வெறி பிடித்தவர் தமிழினத்தை அழித்து இலங்கையை சிங்கள தீவாக மாற்றுவதில் மும்மரமா செயல்பட்டவர்.
 ஜே ஆர் ஜெயவர்த்தனா எப்படி தமிழினத்தை திட்டமிட்டு படுகொலை செய்தாரோ அதிலும் பலமடங்காக இந்த மகிந்த ராஜபக்ச படுகொலைகள் புரிந்தார்.
இவரின் காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்டு எத்தனையோ அப்பாவி பொதுமக்கள்  படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டனர்.
மேலும் தமிழ் அரசியல் தலைவர்களை திட்டமிட்டு படுகொலைகள் செய்தவர். மற்றும் பாடசாலை மாணவிகள் ,ஆசிரியர்கள் கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலைகள் செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். அத்தோடு விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த காலத்தில் அத்துமீறி போரைத் தொடுத்தவர். அத்தோடு தமிழர் தாயகங்களுக்கு பொருளாதார தடையை கொண்டுவந்து மருந்துக்கள்,உணவுப்பொருட்கள் என்பனவற்றை முற்றுமுழுதாத தடைசெய்து தமிழ் மக்களை பட்டினியாலும் நோயாலும்  பாதிப்புக்குள்ளாகி இனப்படுகொலை புரிந்தவர். அதுமட்டுமல்லாது குழந்தைகள் அருந்தும் பால்மாக்களையும் தடைசெய்து பச்சிளம் பிள்ளைகள் பசியினால் துடிதுடித்து  இறக்கவும் காரணமாக இருந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
மேலும் ஸ்ரீலங்கா இராணுவத்திட்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான கடுமையான போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அரசசார்பற்ற தொண்டுநிறுவனங்கள் அனைத்தையும் முழுமையாக போர் நடக்குமிடத்திலிருந்து வெளியேற்றிவிட்டு சென்சிலுவை சங்கம் போன்ற நிறுவனங்களையும் வெளியேற்றி விட்டு பன்னாட்டு ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளரர்கள் அனைவரையும் வெளியேற்றி எந்தவொரு செய்திகளும் வெளிசெல்லாத படி செய்துவிட்டு கொத்துக்குண்டு எரிகுண்டு இவையாவும் தமிழ் மக்கள் மீது வீசப்பட்டன .குறிப்பாக கொத்துகொண்டு எரிகுண்டு இரசாயன குண்டுகள் இவையாவும் சர்வதேச ரீதியால் தடை செய்யப்பட்டதொன்று இவ்வாறான குண்டுகளை பாவித்து ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள்களை கொன்று குவித்தனர்.
மேலும்  பொது மக்கள் அகதியாக உயிர் தப்பிக்கொள்வதற்காக ஓடும் பொது அவர்களை பாதுகாப்பு வலயம் என கூறி   பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் மருத்துவமனைகளிலும் தங்க வைத்து .திட்டமிட்டு   எறிகணை வீச்சுகளும் விமான குண்டுவீச்சுகளையும் அவ்விடங்களில்  நிகழ்த்தி  அந்த மக்களை படுகொலை செய்தவர் . இந்த தாக்குதல்களில் குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் வயோதிபர்கள் என ஆயிரக்கணக்கில்  படுகொலை செய்யப்பட்டனர் அத்தோடு பலர் கண்கள் இழந்து  கால் கைகள் இழந்து ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள் . இன்றுவரை அவர்கள் யாவரும் ஊனமாகவே வாழ்கின்றார்கள்.
தமிழ் மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் திட்டமிட்டு இவரால் அழிக்கப்பட்டதுடன் இவரால் சூறையாடவும் பட்டது.
2009 இறுதிப்போர் நடக்கும்போது பொதுமன்னிப்பு தரலாம் ஆயுதங்களை வைத்துவிட்டு சரணடையும்படி கூறிவிட்டு சரணடைந்தவர்களை  கையையும் கண்ணையும் கட்டி அந்த இடத்திலேயே ஆண் பெண் பாகுபாடின்றி ஆடை களையப்பட்டு வன்கொடுமைக்குட்படுத்தி படு கொலைசெய்தார் . அத்தோடு பிரான்சிஸ் ஜோசெப் பாதிரியாரோடு சரணடைந்த  போராளிகள் மற்றும் அவரின் குடும்பத்தினர் அதாவது பெண்கள் குழந்தைகள் உட்பட பெற்றோரால் கையளிக்கப்பட்ட  நூற்றுக்கணக்கானவர்கள் இன்றுவரையும் காண்பிக்கப்படவும் இல்லை விடுதலை செய்யவும் இல்லை.
1,46,000 மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் கொன்று குவித்தவர் இவர். உலகத்திலேயே அதிக கொடுமைகளை புரிந்து படுகொலை செய்தவர்  என வர்ணிக்கப்படும் ஹிட்லர்.
 ஆனால் அவரை விட 21ம் நூற்றாண்டில் அதிகமான இன படுகொலைகளை புரிந்தவர் இந்த மகிந்த ராஜபக்ச .
 தமிழினத்தை அழித்து இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடாக மாற்றுவதற்கு இன்றுவரையும் துடித்து கொண்டிருக்கிறார் .
***இவர்காலத்தில் நிகழ்ந்த படுகொலைகள்***
முரசுமோட்டை படுகொலை 01.01.2009 அன்று முரசுமோட்டை மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் 05 பேர் கொல்லப்பட்டனர். இதே நாளில்
 முரசுமோட்டை வேறொரு பிரதேச  மக்கள் குடியிருப்பை இலக்கு வைத்து சிங்கள வான்படை நடாத்திய தாக்குதலில் இன்னும் 10 பேர் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு படுகொலை 02.01.2009 அன்று முல்லைத்தீவில் எரிபொருள்  நிலையத்திலும் மற்றும் பேரூந்து பணிமனை ஒன்றின்மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர்.
தர்மபுரம் சந்தி படுகொலை 08.01.2009 அன்று தர்மபுரம் மருத்துவமனை அருகில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 07 பேர் கொல்லப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு தாக்குதல் 11.01.2009 அன்று புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்பு பிரதேசம் நோக்கி சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 04 பேர் கொல்லப்பட்டனர். மேலும்
 16.01.2009 அன்று புதுக்குடியிருப்பின் பல்வேறு பகுதிகள் மீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலிலும் 07 பேர் கொல்லப்பட்டனர்.
புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு தாக்குதல் 18.01.2009 அன்று புதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு பிரதேசங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் 06பேர் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு தாக்குதல் 18.01.2009 அன்று முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகள் மீதி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
வன்னிப்படுகொலை 20.01.2009 அன்று வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள இராணுவம் நடத்திய தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு படுகொலை ஜனவரி மாதம் .2009ம் ஆண்டு 22,23ஆகிய தினங்களில்  முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு
வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை திட்டமிட்ட சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்படனர்.
உடையார்கட்டு படுகொலை  விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான போரின்போது 24.01.2009 அன்று உடையார்கட்டில்  பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை
திட்டமிட்ட  சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 12 பேர் கொல்லப்படனர்.
சுதந்திரபுரம் படுகொலை 25.01.2009 அன்று சுதந்திரபுரத்தில் மக்கள் பாதுகாப்பு வலையம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட  இடங்கள் மீதான திட்டமிட்ட  சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 20 பேர் கொல்லப்படனர்.
 28.01.2009 அன்று வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட  இடங்கள் மீதான திட்டமிட்ட  இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.
உடையார்கட்டு படுகொலை 28.01.2009 அன்று உடையார்கட்டு பிரதேசத்தில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட  இடங்கள் மீதான திட்டமிட்ட  சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 69 பேர் கொல்லப்படனர்.
வன்னி படுகொலை 29.01.2009 அன்று வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட  இடங்கள் மீதான திட்டமிட்ட  சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 44 பேர் கொல்லப்படனர்.  நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.
மூங்கிலாறு மற்றும்  சுதந்திரபுரம் படுகொலை 31.01.2009 அன்று  மூனிகிலாறு மற்றும் சுதந்திரபுரம் பகுதிகளில் மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 39 பேர் கொல்லப்படனர்.  நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.
மூங்கிலாறு படுகொலை 01.02.2009 அன்று மூங்கிலாறு மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்ட  இடங்கள் மீதான திட்டமிட்ட சிங்கள வான்படை நடாத்திய குண்டுத்தாக்குதலில் தாக்குதலில் 26 பேர் கொல்லப்படனர்.  நூற்றுக்கணக்கான மக்கள் காயப்பட்டு ஊனமாக்கப்பட்டனர்.
உடையார்கட்டு படுகொலை 02.02.2009 அன்று உடையார்கட்டு மருத்துவமனை மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டனர் . பலர் காயப்பட்டனர் சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.
வன்னியின் சுதந்திரபுரத்தில் இடம்பெற்ற இராணுவ கொத்துக்குண்டு தாக்குதலில் 03.02.2009 அன்று 52 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாகவும் 80 பேர் படுகாயமடைந்ததாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திரபுரம் மற்றும் இருட்டுமடு படுகொலை  04.02.2009 அன்று மக்கள் பாதுகாப்பு வலயம் என அரசினால் அறிவிக்கப்பட்டு குடியமர்த்தப்பட்ட பொது மக்கள் மீது  சிங்கள இராணுவத்தால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.
05.02.2009 இருட்டுமடு மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலிலும் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் மருத்துவரும் அடங்குவர்.
புதுக்குடியிருப்பு படுகொலை  05.02.2009 அன்று புதுக்குடியிருப்பு
மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.
புதுக்குடியிருப்பு படுகொலை  07.02.2009 அன்று புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் நினைவு மருத்துவமனை மீது சிங்கள இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 61 நோயாளிகள் உட்பட 126 பேர்  கொல்லப்பட்டனர்.238 பேர் படுகாயமடைந்தனர்.
முல்லைத்தீவு சுதந்திர புரத்தில் 08.02.2009 அன்று   நிகழ்ந்த படுகொலையில் 72 பேர் கொல்லப்பட்டதுடன் 198 பேர் படுகாயமடைந்தனர்
வன்னிப்பிரதேசம் எங்கும் 09.02.2009 அன்று இலங்கை வான்படையினரால் நிகழ்த்திய தாக்குதலில் 25 பேர் படுகொலை செய்யப்பட்டதுடன் 77 பேர் பசுடுகாயம் அடைந்தனர்.
மாத்தளன் படுகொலை 10.02.2009 அன்று மாத்தளனில் மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 36 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்.87 பேர் படுகாயமடைந்தனர்
புதுமாத்தளன் படுகொலை 11.02.2009 அன்று புதுமாத்தளன் மக்கள் பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 16 பேர் கொல்லப்படனர்.
 வள்ளிபுனத்திலும் தேவிபுரத்திலும் 12.02.2009   இடம்பெற்ற தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதுடன் 46 பேர் காயமடைந்தனர்.
மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களான அம்பலவன் பொக்கணை மாத்தளன் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் இலங்கை இராணுவத்தாலும் வான்படையினராலும் நிகழ்த்திய படுகொலைகள்
13.02.2009   27பேர் படுகொலை 116 பேர் படுகாயம்
14.02.2009   78 பேர் படுகொலை  132 பேர் படுகாயம்
15.02.2009   56 பேர் படுகொலை   76 பேர் படுகாயம்.
தேவிபுரம் மற்றும் வள்ளிபுனம் படுகொலை 14.02.2009 அன்று தேவிபுரம்
மக்கள் பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 75 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர்
16.02.2009 அன்றும் வள்ளிபுனம் மக்கள் பாதுகாப்பு வலையம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 260 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்படனர். பலர் காயமடைந்ததுடன் லட்சக்கணக்கான சொத்துக்களும் அழிக்கப்பட்டன.
மாத்தளன் படுகொலை 18.02.2009 அன்று மாத்தளன் பகுதியில்
மக்கள்  பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் மீதான சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 108 பேர் கொல்லப்படனர்.  நூற்று கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
ஆனந்தபுரம் படுகொலை 18.02.2009 அன்று ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள வான்படை மேற்கொண்ட தாக்குதலில் 50 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இரணைப்பாலை படுகொலை 19.02.2009 அன்று இரணைப்பாலை பகுதியில் இடம்பெயர்ந்தோர் வாழ்விடத்தில் சிங்கள வான்படை மேற்கொண்ட தாக்குதலில் 30 குடும்பங்கள் நிர்மூலமாக்கப்பட்டன 48 மணி நேரத்தில் 50 அப்பாவி தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு 130 பேர் படுகாயம் அடைந்தனர்.

வன்னி பகுதிகளில் படுகொலை 21.02.2009 அன்று  முல்லைத்தீவில் மக்கள் பாதுகாப்பு வலயம் என இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மக்கள் போய் குடியிருந்த வேளை சிங்கள இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் 13 பேர் கொல்லப்படனர்
அத்தோடு 22.02.2009 அன்றும் இதே பிரதேசத்தில் இராணுவ குண்டுவீச்சில் 39 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
புதுமாத்தளன் படுகொலை 24.02.2009 அன்று புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனைமீது சிங்கள இராணுவம் மேற்கொண்ட குண்டுவீச்சு தாக்குதலில் 06 பேர் கொல்லப்பட்டனர்.
27.02.2009 மாத்தளன் பகுதியில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட எறிகணை தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர்.  65 பேர் படுகாயம்
முல்லைத்தீவு படுகொலை 28.02.2009 அன்று முல்லைத்தீவு பாதுகாப்பு வலைய பிரதேசத்தில் சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்
இந்த படுகொலைகள் யாவிட்கும் சர்வதேச போர் விதிமுறைகளை மீறியவரும் இனப்படு கொலையாளருமான  இலங்கையின் சனாதிபதி மகிந்த ராஜபக்சவே  காரணமாவார்.
நன்றி.
ம. கஜன்
அனைத்துலக மனித உரிமைச்சங்கம் பிரெஞ்சு
00 33 1 45 98 89 49 0033 75 80 870 84
Email aidhfrance@gmail.com
SHARE