நாதன். கஜன் ஆகியோரின்22வது ஆண்டு வணக்க நிகழ்வு பிரான்சில் நடைபெற்றது!

159

பிரான்ஸ் தலைநகர் பரிசில் வைத்து 26.10.1996 அன்று சிறீலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர்  லெப்.கேணல் நாதன் மற்றும் ஊடகப்போராளியும் ஈழமுரசின் நிறுவன ஆசிரியருமான கப்டன் கஜன் ஆகியோரின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று  (26.10.2018) இம் மாவீரர்களின் கல்லறை அமைந்துள்ள பந்தன் துயிலும் இல்லத்தில் இடம் பெற்றது.

 

நிகழ்வாக பொதுச் சுடரினை லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் அ.புவனேஸ்வரராஜா  அவர்கள் ஏற்றி வைத்தார்.


அக வணக்கத்தைத் தொடர்ந்து குறித்த மாவீரர்களின் கல்லறைகள் மீது தமிழீழத் தேசியக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

கப்டன் கஜனின் சகோதரர்கள் மாவீர்களின் கல்லறைகளுக்கான ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தனர்.

தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழ் உணர்வாளர் ,எழுத்தாளர் திரு.பா.செயப்பிரகாசம் சூரியதீபன்  உரையாற்றினர்.

SHARE