கொட்டும் மழையிலும் கேப்பாபுலவு மக்கள் நிலத்தை மீட்க போராட்டம்

212

ராணுவத்தினர் வசம் உள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்க கோரி முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்றுடன் 610 நாட்களை தாண்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது

610 ஆவது நாளான இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு கேப்பாபிலவு  மக்களுடன் முல்லைத்தீவு நகரத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

கொட்டும் மழையிலும் வீதியால் சென்று கேப்பாபிலவு மக்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கை அடங்கிய மனுவை ஜனாதிபதிக்கும் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பக்கோரி  முல்லைத்தீவு பதில் அரசாங்க அதிபரிடம் மனு கையளித்தனர்

 

SHARE