கேணல்பரிதியின் 6ஆம் ஆண்டு வணக்கநிகழ்வும் நீதிகோரி கவனயீர்ப்புப் போராட்டமும்!

186
பாரிசில் 08.11.2012 அன்று படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதியின் 6 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 08.11.2017 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கேணல் பரிதி வீரச்சாவடைந்த இடத்தில் மலர் வணக்கமும் அதனைத் தொடர்ந்து கேணல் பரிதியின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ள பத்தனில் 11.00 மணிக்கு வணக்க நிகழ்வும்,
பரிசில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன், ஈழமுரசு நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கோரி பிரான்சு பாராளுமன்ற முன்றலில் 15.00 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டமும் இடம் பெற உள்ளது.
SHARE