பிரித்தானிய படைகளில் இணைய இலங்கையர்களுக்கு வாய்ப்பு!

108

பொதுநலவாய நாடுகளில் உள்ளவர்களுக்கு பிரித்தானியாவின் ஆயுதப் படைகளில் இணைய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இதில் இலங்கையர்கள் இணைந்துகொள்ளவதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.

அதன்படி தற்போது பிரித்தானியாவில் குடியுரிமை பெற்று 5 வருடங்கள் முடிவடைந்த பொதுநலவாய நாடுகளை சேர்ந்தவர்களே இதில் இணைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சகம் முன்னர் இருந்த விதிகளை தளர்த்தி புதிதாக இராணுவ உதவியாளர்கள், கடற்படை மற்றும் ஆகாயப்படைகளுக்கு பெண்களையும் இணைக்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு, படையினர், மாலுமிகள் மற்றும் விமான உதவியாளர்களுக்கான 8,200 பேருக்கான பற்றாக்குறை காணப்பட்டது. மேலும் இது 2010 முதல் மோசமான பற்றாக்குறை ஆகும் என சுதந்திரமான அரசாங்கத்தின் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆட்சேர்ப்பு விதிகள் மாற்றம் தொடர்பில் அமைச்சர்கள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE