டி20 தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி: இன்று மே.இ.தீவுடன் 2-வது மோதல்

35

இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வென்று டி20 கிரிக்கெட் தொடரை வெல் லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.

மேற்கிந்தியத் தீவு அணிக் கெதிரான டெஸ்ட் தொடர், ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகிறது.

கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முத லாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத் தில் வெற்றி கண்டது. முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவு அணி 20 ஓவர்களில் 8 விக் கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 17.5 ஓவர் களில் 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. தினேஷ் கார்த்திக் 31 ரன்களும், கிருணல் பாண்டியா 21 ரன்களும் எடுத்து அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 3 விக்கெட்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்த நிலையில் 2-வது டி20 கிரிக்கெட்போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடை பெறவுள்ளது. இந்த ஆட்டத் திலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் நோக் கில் இந்தியா களம் காண வுள்ளது.

அதே நேரத்தில் 2-வது ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் மேற்கிந்தியத் தீவு அணி களமிறங்கவுள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவண், கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த், கிருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஷாபாஸ் நதீம், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கலீல் அகமது, உமேஷ் யாதவ்.

மேற்கிந்தியத் தீவு: கார்லோஸ் பிராத் வெயிட் (கேப்டன்), டேரன் பிராவோ, சிம்ரன் ஹெட்மையர், ஷாய் ஹோப், கீமோ பால்,கெய்ரன் பொலார்டு, தினேஷ் ரம்தின், ஷெர்பேன் ரூதர்போர்டு, ஒஷேன் தாமஸ், ஹரி பியர்ரே, ஒபெட் மெக்காய், ரோவ்மான் பொவல், ஓஷான் தாமஸ், நிக்கோலஸ் பூரன். நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

SHARE