இலங்கையின் தற்போதைய நிலைமை மிக மோசமானது – ஐ.நா இராஜதந்திரி

50

கடந்த கால யுத்த நிலைமையை விட தற்போதைய நிலைமை மிக மோசமானது என அல்ஜீரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், ஐ.நா இராஜதந்திரியுமான லக்தர் பிரஹிமி தெரிவித்துள்ளார்.

நெல்சன் மண்டேலாவினால் நிறுவப்பட்ட சமாதானம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் செயற்படும் ‘த எல்டர்ஸ்’ அமைப்பினூடாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இலங்கையின் முப்பது வருடகால யுத்த நிலைமைகளின் போது கூட தற்போதுள்ள நிலையினைப் போன்றதொரு மோசமான அரசியலமைப்பு நெருக்கடியினை எதிர்கொண்டிருக்கவில்லை.

நாட்டின் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைப் பாதுகாப்பதுடன், நாடாளுமன்றத்தின் ஜனநாயகத் தன்மையினையும் உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும்.

அத்தோடு அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை, நியாயத்துவம் என்பன காணப்பட வேண்டும் என்பதுடன், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் செயற்பட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

SHARE