இங்கி. கேப்டன் ஜோ ரூட்டை வீழ்த்தி வரலாறு படைத்தார் இலங்கை ஸ்பின்னர் ரங்கனா ஹெராத்

108

இங்கிலாந்துக்கு எதிரான இலங்கையின் முதல் டெஸ்ட் மூத்த இடது கை ஸ்பின்னர் ரங்கனா ஹெராத்தின் பிரியாவிடை டெஸ்ட் போட்டியாகும். கால்லே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் வரலாறு படைத்தார் ரங்கனா ஹெராத்.

இன்னிங்சில்ன் 17வது ஒவரை ரங்கனா ஹெராத் வீச ஜோ ரூட் (35) நன்றாக ஆடி வந்த நிலையில் ஹெராத் பந்தை மேலேறி வந்து அடிக்க முயன்று தன்னைத் தானே யார்க் செய்து கொண்டு பவுல்டு ஆனார்.

இது கால்லே மைதானத்தில் ரங்கனா ஹெராத் கைப்பற்றும் 100வது விக்கெட் என்ற வரலாற்று விக்கெட்டாகும்.

முத்தையா முரளிதரன்  3 மைதானங்களில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார். கொழும்பு எஸ்.எஸ்.சி., அஸ்கிரியா ஸ்டேடியம் கண்டி, மற்றும் காலே சர்வதேச ஸ்டேடியம் ஆகியவற்றில் முரளிதரன் 100 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் சமீபத்தில் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை புரிந்தார். அந்த வகையில் ஒரே மைதானத்தில் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 3வது சர்வதேச வீரர் ரங்கனா ஹெராத் ஆவார்.

முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 321 ரன்கள் எடுத்துள்ளது. கடைசியில் பென் ஃபோக்ஸ் 87 ரன்களையும் ஆல்ரவுண்டர் சாம் கரன் 48 ரன்களையும் ஆதில் ரஷீத் 35 ரன்களையும் விளாச 103/5 என்ற நிலையிலிருந்து 321/8 என்று முதல் நாளை முடித்துள்ளது.

SHARE