நீங்கள் சொல்லக்கூடாது?’- கோலி மீது கொந்தளித்த நெட்டிசன்கள்

49

இந்திய பேட்ஸ்மேன்களை விரும்பாமல், வெளிநாட்டு வீரர்களை விரும்பும் ரசிகர்கள் இந்தியாவில் வசிக்கத் தேவையில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

விராட் கோலியின் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ரீ ட்வீட் செய்தது அவருக்குக் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. இதனால், அந்த ரசிகரைக் கடுமையாகக் கண்டித்து விராட் கோலி வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் விராட் கோலி மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையும், நல்ல எண்ணமும் ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து அவரிடம் ஏதும் சிறப்பான பேட்டிங் திறமை இருப்பதாகத் தெரியவில்லை. நான் இந்திய பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்வதை ரசிப்பதைக் காட்டிலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பேட்ச செய்வதை ரசித்துப் பார்ப்பேன் என்று அந்த ரசிகர் தெரிவித்திருந்தார்.

அதற் கோலி பதில் அளிக்கையில், ”என்னைப் பொறுத்தவரை இந்தக் கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம், வாழலாம். ஏதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காகக் கவலைப்படவில்லை, அதனால் இப்படிப் பேசவில்லை. மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உங்களுடைய முன்னுரிமை எதுவென்று முடிவு செய்யுங்கள்” என்று காட்டமாக கோலி பதில் அளித்திருந்தார்.

இதற்கு நெட்டிசன்கள் விராட் கோலியை கடுமையாக விமர்சித்து, வறுத்து எடுத்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் கோலி, வெளிநாட்டு கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கிறார். கோலி கூறிய கூற்றுப்படி பார்த்தால், கோலியை நாட்டை விட்டுத் துரத்தி ஸ்பெயின் அல்லது ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டும் என்று அப்துல் பாஷித் என்ற நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

தரன்ஜித் சிங் என்ற ரசிகர் ட்வீட் செய்ததில், பாஜகவினர் போல் கோலி பேசியுள்ளார். மோடியைப் பிடிக்காவிட்டால் நாட்டை விட்டுவெளியேறு என்று பாஜகவினர் பேசுகிறார்கள். அதுபோல் இந்திய வீரர்களைப் பிடிக்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேறு என்று கோலி பேசியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

அன்சர் அஸ்லாம் என்பவர் கூறுகையில், கடந்த 2008-ம் ஆண்டில் எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் ஹெர்ஸ்லே கிப்ஸ் என்று கோலி கூறினார். அப்படியென்றால், கோலியைத் தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிடலாமா எனத் தெரிவித்துள்ளார்.

விஷ்ணு சர்மா என்பவர் கூறுகையில், நல்ல விளையாட்டு வீரருக்கு இந்தப் பேச்சு அழகானதல்ல கோலி. கேப்டனாக இருந்து கொண்டு பேசுவது முறையல்ல எனத் கண்டித்துள்ளார்.

விராட் கோலியின் பேச்சைக் கண்டித்து தொடர்ந்து அவருக்கு எதிராக நெட்டிசன்கள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்

SHARE